ரஜினி எனக்கு இதைத்தான் சொல்லி கொடுத்தார்... நெகிழும் மகாராஜா பட இயக்குனர்..
Rajinikanth: பெரிய இயக்குனர்கள் இயக்கும் படங்கள், பெரிய நடிகர்கள் இயக்கும் படங்களே சில சமயம் கணிப்பு தவறிவிடும். அதாவது, ரசிகர்களை திருப்திப்படுத்தாமல் தோல்வியை சந்திக்கும். இது, ரஜினி, விஜய், அஜித்துக்கே நடந்திருக்கிறது. கதை சரியாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே படம் ஹிட் அடிக்கும்.
ஒரு படத்தின் வியாபாரத்திற்கு புரமோஷன் மிகவும் முக்கியம். புரமோஷன் ஒரு படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். சமூகவலைத்தளங்களில் எந்த படம் பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும். அதனால்தான், இப்போதெல்லாம் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிக புரமோஷன் செய்கிறார்கள்.
அதேநேரம், ஒரு திரைப்படம் எந்த புரமோஷனும் இல்லாமல், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி பேசப்பட்டு ஹிட் அடிக்கும். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். சில மாதங்களுக்கு முன்பு நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா இதற்கு பெரிய உதாரணம்.
இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவே பெரிய புரமோஷனாக அமைந்தது. படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதோடு, ஓடிடியில் வெளியாகி அதிகம் பேர்களால் பார்க்கப்பட்ட படம் என்கிற சாதனையையும் இப்படம் பெற்றது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கவிருக்கிறார். அந்த அளவுக்கு இப்படம் ரீச் ஆகியுள்ளது.
இந்நிலையில், மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் ரஜினியை சந்தித்த அனுபவம் பற்றி பேசியிருக்கிறார். மகாராஜா பட ரிலீஸுக்கு பின் ரஜினி சாரை போய் பார்த்தேன். சினிமாவில் எப்படி சர்வைவ் பண்ணனும்னு முக்கியமான பாடங்களை எனக்கு சொன்னார். என் மேல் ரொம்ப அக்கறையா இருக்கார். மகாராஜா படம் பற்றி கொஞ்சம் பேசினோம். ஆனா, அடுத்து என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு அறிவுரைகள் சொன்னார்’ என சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே இந்த சந்திப்பு பற்றி சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நித்திலன் சுவாமிநாதன் ‘இந்த சந்திப்பில் நீங்கள் உங்கள் பொற்கரங்களால் எழுதிய நாவலை படிப்பது போல இருந்தது. உங்களிடமிருந்த அனுபவங்களை கற்றுக்கொண்டேன். உங்களுடைய விருந்தோம்பல் என்னை வியக்க வைத்தது’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.