முதல்ல அந்த விஷயத்தை உடைச்சவரு ஜெயம் ரவிதான்!.. ஒரேடியா புகழ்ந்த நித்யா மேனன்..
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நித்யா மேனன் அதன் பிறகு மலையாள சினிமா மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார். தமிழில் முதன்முதலாக 180 என்கின்ற புகைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக தமிழில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்ததற்கு நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கின்றது. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் படத்தில் இருந்து தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை நித்யா மேனனும் பல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு கொடுத்திருந்த பேட்டியில் நித்யா மேனன், ஜெயம் ரவி குறித்து பெருமையாக பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சினிமாவை பொருத்தவரையில் ஒரு ரூல் இருக்கின்றது. ஒரு படம் வெளியானால் முதலில் அதற்கான கிரெடிட் மொத்தமும் நடிகருக்கு சேரும்.
அதன் பிறகு இயக்குனருக்கு சேரும் அதன் பிறகு தான் நடிகைக்கு சேரும். அப்படி ஒரு ஃபார்முலா இருந்து வரும் நிலையில் அதனை உடைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் ஜெயம் ரவி அதனை ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் ஒரு பெண் இயக்குனர் இந்த படத்தை இயக்கி இருக்கின்றார் என்பது மற்றொரு காரணமாகவும் பார்க்கப்படுகின்றது. மேலும் படத்தின் போஸ்டர் வெளியீட்டில் தனது பெயருக்கு பிறகு ஜெயம் ரவி பெயர் இடம் பெற்றது குறித்து பலரும் பலவிதமான கேள்விகளை முன் வைத்தார்கள்.
ஆனால் இது குறித்தும் முதன் முதலாக ஜெயம் ரவியிடம் பேசும் போது அவர் எதுவுமே சொல்லவில்லை. தாராளமாக செய்யுங்கள் இது ஒரு புது முயற்சி என்று என்று ஆதரவு கொடுத்தார். சினிமாவில் பல வருடங்களாக பின்பற்றி வந்த ஒரு விஷயத்தை ஜெயம் ரவி உடைத்து இருக்கின்றார்' என்று அந்த பேட்டியில் நெகழ்ச்சியாக பகிர்ந்திருந்தார் நித்யா மேனன்.