இட்லி கடை படத்துல நித்யா மேனன் கேரக்டர்.. அப்ப அடுத்த நேஷனல் அவார்ட் கன்பார்ம்!..

by Ramya |
nithya menon
X

Actress Nithyamenon: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன் பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இவர் தமிழில் முதன் முதலாக 180 என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார் நடிகை நித்யா மேனன். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வருகின்றார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.


இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் நித்யா மேனனுக்கு இப்படத்தின் மூலமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.

சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியை காட்டிலும் நித்யா மேனனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற முடிந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் பாடல், டீசர் டிரெய்லர் அனைத்துமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. இன்றைய காலத்தில் இளைஞர்களின் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கின்றார். கிருத்திகா உதயநிதி படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களை இருப்பதால் தொடர்ந்து பட குழுவினர் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பல்வேறு youtube சேனல்களுக்கு நித்யா மேனன், ஜெயம் ரவி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோர் பேட்டி கொடுத்து வருகிறார்கள். சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் மற்றும் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள். தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நித்யா மேனன் இட்லி கடை திரைப்படம் குறித்து பேசி இருந்தார்.


அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' இட்லி கடை திரைப்படம் காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு நேர் எதிராக இருக்கும். அந்த படத்திற்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் என்னை பார்ப்பீர்கள் என்று கூட நீங்கள் கற்பனை செய்திருக்க மாட்டீர்கள். நித்யாவை இப்படியும் பார்க்கலாமா? என்பது போல் தான் இந்த திரைப்படம் இருக்கும்.

இட்லி கடை திரைப்படத்தில் ஒரு எமோஷனல் கதாபாத்திரத்தில் என்னை பார்ப்பீர்கள். வித்தியாசமான ஒரு நித்யா மேனனை நானே அந்த திரைப்படத்தில் பார்த்தேன். நிச்சயம் அந்த கதாபாத்திரம் உங்களுக்கு அழுகையை கொடுக்கும். இதுபோல ஒவ்வொரு வருடமும் ஒரு புதுவிதமான கதாபாத்திரங்கள் என்னையே அறியாமல் அமைந்து விடுகின்றது. அதில் நடிக்கும் போது மேலும் ஒரு சுவாரஸ்யம் கிடைக்கின்றது' என்று பேசி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ அடுத்த தேசிய விருது கன்பார்ம் என்று நித்யா மேனனை புகழ்ந்து வருகிறார்கள்.

Next Story