‘பைசனை’ விட அந்தப் படம் நல்லா இருக்கும்! ஆனா கொண்டாடல.. சம்பந்தப்பட்டவரே சொல்றாரு
தனது தனித்துவமான கதையின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் மாரிசெல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்கள் அதற்கு தக்க உதாரணங்களாகும். தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படத்தை உருவாக்கிய மாரிசெல்வராஜ் அந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பைசன் திரைப்படம் நல்ல ஒரு அட்டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது. தீபாவளி ரிலீஸாக பைசன் திரைப்படம் கடந்த 17 ஆம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸாவதற்கு முன்பிருந்தே இந்தப் படத்தின் மீது ஒரு விமர்சனம் இருந்து வந்தது. அதாவது வழக்கமாக மாரிசெல்வராஜ் அமுக்கிட்டான், பிதுக்கிட்டான் என சாதிய ரீதியான படமாகத்தான் பைசன் திரைப்படத்தையும் எடுத்திருப்பார் என்று நினைத்திருந்தார்கள்.
ஆனால் எல்லாவற்றையும் தாண்டி மனிதநேயம், ஒற்றுமையை வலியுறுத்திய படமாக இந்தப் படம் உருவானது. இந்தப் படத்தை பார்த்து ரஜினி அவரது பாராட்டுக்களை தெரிவித்தார். மாரிசெல்வராஜை அழைத்து தனது வாழ்த்துக்களை கூறினார் ரஜினி. அதே போல் மணிரத்னமும் பைசன் படத்தை சமீபத்தில் பார்த்து மாரிசெல்வராஜை பைசன் என சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
ஒரு பக்கம் டியூட் படம் வெற்றிகரமாக ஓடினாலும் அதற்கு இணையாக பைசன் திரைப்படத்தையும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பைசன் திரைப்படத்திற்கு நிவாஸ்பிரசன்னாதான் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். அவர் ஒரு பேட்டியில் கூறும் போது பைசன் திரைப்படத்தின் ரி ரிக்கார்டிங்கில் இருந்து பிஜிஎம் வரை அதில் எனக்கு திருப்தியாகவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

பைசன் திரைப்படத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் மொத்தம் 17 நாள்கள்தானாம். அதில் ஏகப்பட்ட குறைபாடுகள் இருந்ததாம். ஆனால் அதுவே படத்திற்கு ஒரு அட்வாண்டேஜாக மாறியது என்று கூறியுள்ளார் நிவாஸ். மேலும் கோவை சரளா நடித்த செம்பி படத்திற்கும் நிவாஸ்தான் மியூஸிக். அந்தப் படத்திற்கு 2 லிருந்து 3 மாதங்கள் ஆனதாம். அந்தப் படத்திற்கு மியூஸிக் நன்றாக இருந்தது. ஆனால் அதை மக்கள் கொண்டாடவில்லை. இதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது என நிவாஸ் கூறியிருக்கிறார்.
