பாலாவுக்கு எதிரிகள் இல்லை.. புரமோஷனுக்காக என்ன வேணாலும் செய்வீங்களா.?
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் அறியமானார் பாலா. சாதாரண போட்டியாளராக அறிமுகமாகி தன்னுடைய அதீத திறமையால் போட்டியின் இறுதி வரை சென்றார். அது மட்டும் இல்லாமல் அந்த சீசனில் டைட்டில் வின்னரும் ஆனார். அதன் பிறகு கேபிஒய் பாலா ஆனார். விஜய் டிவியில் உள்ள அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பாலா இல்லாத ரியாலிட்டி ஷோவே விஜய் டிவியில் கிடையாது என்ற நிலை வந்தது.
அப்படி இருக்கும் சமயத்தில் பாலாவிற்கு அவ்வப்போது படத்தில் நடிப்பதற்காக சிறு சிறு வாய்ப்புகளும் வந்தது. ஒரு காமெடியனாக விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில் தன்னுடைய முதல் வெள்ளித்திரை பதிப்பை பதித்தார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து டிவி ஷோக்கள் , youtube மற்றும் தொகுப்பாளர் என்று அடுத்தடுத்து பயணித்துக் கொண்டிருந்தார். அப்படி தன்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கும் செலவழிக்காமல் மக்களுக்காக செலவழித்து வந்தார்.
ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பதில் இருந்து ஆரம்பித்த இவரது தொண்டு இன்று நூற்றுக்கணக்கான மக்கள் இவரால் நன்மை பெற்றுள்ளனர். எல்லோரின் ஆசையும் நிறைவேற்றிய பாலா அவருக்கும் ஒரு ஆசை இருந்துள்ளது. வெள்ளித் திரையில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசைதான். ஒரு முறை ராகவா லாரன்ஸ் பாலாவிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அவரும் எனக்கு ஹீரோ ஆக வேண்டும் என்று கூறிவிட்டார்.
லாரன்ஸ் மாஸ்டரும் உன்னை ஹீரோவாக மாற்றிக் காட்டுகிறேன் என்று வாக்கு கொடுத்தார். அதற்கு முன்பு இயக்குனர் செரிஃப்பின் இயக்கத்தில் ’காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். இந்த படத்தில் பாலாவுடன் முக்கிய கதாபாத்திரமாக பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்திருப்பார்கள். எமோஷனல் டிராமாவாக வந்திருக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது.
இந்த படம் கடந்த வாரம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியானது. மேலும் இதனுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ’மதராஸி’ திரைப்படமும் வெளியானது. அந்த படத்திற்கும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பாலா படத்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை கிழித்ததாக சில சர்ச்சைகள் எழுந்தது. இதைப் பற்றி சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிக்கையாளருமான வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில்,
” பாலாவிற்கு மிகப்பெரிய மனசு உள்ளது. நல்ல மனிதர் பாலா ஜெயித்தால் அவரால் இங்கு நிறைய மனிதர்கள் பிழைப்பார்கள். தற்போது பாலா நடித்திருக்கும் காந்திக்கு முன்னாடி படம் வெளிவந்துள்ளது. அதை விமர்சகர்கள் விமர்சிக்கவில்லை. ஏனென்றால் பாலா மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காகவே, இந்த படத்தின் இயக்குனர் தொடர்ந்து இந்த படத்தை முடக்க சதி செய்கிறார்கள் எனக் கூறி வருகிறார்.
பாலாவுக்கு எதிரிகள் இல்லை. தேவையில்லாமல் யார் மீதும் பழி சொல்லக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்துக்கு ப்ரமோஷன் ஆக தான் இந்த மாதிரி இயக்குனர் வேலை செய்து வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
