Bison dude Diesel: பைசன்.. ட்யூட்... டீசல்... 3 படங்களுக்கும் டல்லடிக்கும் முன்பதிவு!.. போச்சா?!...

தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் ஒரு பக்கம் என்றாலும் பெரிய நடிகர்களின் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும்.. அதுதான் அவர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும். முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும். அதன்பின் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியானது. ஆனால் இந்த வருட தீபாவளி விஜய், அஜித் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மாறாக இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் Dude ஆகிய மூன்று படங்களும் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய கலகலப்பான காதல் கலந்த செண்டிமெண்ட் படமாக டியூட் படம் உருவாகி இருக்கிறது. எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதேபோல் மாரி செல்வராஜனின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் வழக்கமான மாரி செல்வராஜின் படங்களைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பேசியிருக்கிறது. அடுத்து இதுவரை ரொமான்ஸ் மட்டுமே செய்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல்முறையாக டீசல் படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கிறார். இந்த மூன்று படங்களும் நாளை அதாவது அக்டோபர் 17ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகியுள்ளது
இந்நிலையில், இவர்கள் மூவருமே பெரிய நடிகர்கள் இல்லை என்பதால் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள். பொதுவாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் என்றால் முன்பதிவிலேயே சில கோடிகளுக்கு டிக்கெட் விற்பனையாகும். ஆனால் இவர்கள் மூவரும் அந்த ரேஞ்சுக்கு இல்லை என்பதால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது வசூலை பாதிக்குமா?.. இதில் எந்த படம் அதிக வசூலை அள்ளும் என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.