லோகேஷ், நெல்சனை மிஞ்சிய கோலிவுட் இயக்குனர்கள்… சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

by Akhilan |
லோகேஷ்_நெல்சன்
X

லோகேஷ்_நெல்சன்

Kollywood: தமிழ் சினிமாவில் நடிகர்கள் தான் அதிக சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு இயக்குனர்களுக்கு கோடிக்கணக்கில் கொடுத்துள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் மார்க்கெட் உயர தொடங்கியதிலிருந்து, நடிகர்கள் தங்கள் சம்பளங்களை வரிசையாக ஏற்றுக் கொண்டே இருக்கின்றனர். அதிலும் நடிகர் விஜய் கடந்த மூன்று திரைப்படங்களுக்கு ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடி அளவில் சம்பளத்தை உயர்த்தினார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படத்திற்காக 275 கோடி வரை சம்பளமாக வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சனுக்கு ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியதற்காக 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.

அது போல விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கும் சம்பளமாக 10 கோடி வரை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுதான் தமிழ் சினிமாவின் இயக்குனர் வாங்கிய உச்சபட்ச சம்பளம் எனவும் பலர் கிசுகிசுப்பு வந்தனர்.

ஆனால் தற்போது இவர்களையே மிஞ்சி இருக்கின்றனர் இரண்டு இயக்குனர்கள். அதில், இரண்டாம் இடத்தில் இருப்பது சமீபத்தில் வெளியான விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கிய வெற்றிமாறன். முதல் பாகத்தில் வரவேற்பு தொடர்ந்து பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது.

கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் வசூலில் பின்தங்கி இருந்தாலும் வெற்றிமாறனுக்கு சம்பளமாக மட்டுமே 20 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதுபோல தற்போது முதல் இடத்தில் இருப்பது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.

இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை குவித்தது. இதுவரை கமல்ஹாசனின் திரைப்படம் வாங்காத எல்லா கெட்ட பெயர்களையும் வாங்கியது.

இருந்தும் தற்போது இதை சரி செய்ய படக்குழு மூன்றாம் பாகத்தை தயாரித்து வருகிறது. ராம்சரண் நடிப்பில் கேம்சேஞ்சர் திரைப்படத்தை முடித்திருக்கும் ஷங்கர் அடுத்து இந்தியன்3 திரைப்படத்தின் வேலைகளில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. அத்திரைப்படத்திற்காக தான் அவருக்கு 60 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.

Next Story