தன்ஷிகா அடி என் தலைக்கு போகுது... கல்யாண அறிவிப்பை அவர் ஸ்டைலில் வெளியிட்ட விஷால்

Vishal: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் திருமணம் குறித்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆக்ஷன் ஹீரோக்களில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். தொடர்ச்சியாக தமிழ் ஹிட் படங்களை நடித்து வந்த விஷால் கொஞ்சம் காலமாகவே பெரிய அளவில் படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து அவரின் மதகஜ ராஜா திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
அதன் விழாவில் கலந்துக்கொண்ட விஷால் பார்ப்பதற்கே உடல் மெலிந்து கண்ணில் பெரிய கண்ணாடி போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் சமீபத்திய மேடையில் கூட மயக்கம் போட்டு விழுந்தும் அதிர்ச்சி தந்தார்.
இது அவரின் அதீத உடற்பயிற்சியில் தான் எனக் கூறப்படுகிறது. தமிழ் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய இடத்தில் இருந்தார் விஷால். நடிகர் சங்க புது கட்டிடம் கட்டி அதில் தான் நான் திருமணம் செய்துக்கொள்வேன் எனவும் கூறி இருந்தார்.
பல நடிகைகளின் பெயர்கள் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு விரைவில் கல்யாணம் என விஷால் சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது ஆச்சரியப்படும் விதமாக நடிகை சாய் தன்ஷிகாவை மணக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சாய் தன்ஷிகா நடிப்பில் வெளியாக இருக்கும் யோகிடா படத்தின் டிரெய்லர் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துக்கொண்ட விஷால் பேசும் போது, எனக்கு கல்யாணம் முடிவாகிடுச்சு. பொண்ணும் கிடச்சிடுச்சு. அவங்க வேற யாரும் இல்ல. அவங்க அப்பாவும் இருக்காங்க. அவர் ஆதரவுடன் இதை சொல்றேன் சாய் தன்ஷிகா தான்.
சூப்பரான பொண்ணு. கண்டிப்பாக வடிவேலு கலாய்க்கிற ஜோடியா நாங்க இருக்க மாட்டோம். ஏன்னா கிக்கு என் தலைக்கு வருது. நான் சூதானமா இருக்கணும். செயலும் கொஞ்சம் ஒழுங்காக்கணும். நானும் தடுப்பு முறையை கத்துக்கணும் போல. ஆனா சண்டைலாம் வராது.
நாங்க இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து இருக்கிறோம். இந்த விழாவில் என் வருங்கால மனைவி குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்றை சொல்கிறேன். நாங்க கல்யாணம் செய்துக்கொள்ள போகிறோம். தன்ஷிகாவிற்காக என்னை சேவ் செய்து வைத்திருக்கிறார் கடவுள்.
நாங்க நல்ல வாழ்க்கை வாழ்வோம். அவர் கல்யாணத்துக்கு பின்னால் நடிப்பாங்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. கண்டிப்பாக நடிப்பாங்க. அவங்க திறமையானவங்க எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 29ந் தேதி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.