SK இல்லைனாலும் படம் ஹிட்டாயிருக்கும்! ‘அமரன்’ குறித்து தயாரிப்பாளர் போட்ட அணுகுண்டு
 
                                    
                                சிவகார்த்திகேயன் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்திருந்தது அமரன் திரைப்படம். கடந்தாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் இன்றுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது அமரன் திரைப்படம். ஒரு வருடத்தை நிறைவு செய்ததை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் அமரன்.
வழக்கமாக காதல் மற்றும் காமெடி கலந்த படங்களிலேயே நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது. படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் சிவகார்த்திகேயன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவானது. இதற்காக படத்தின் இயக்குனர் நான்கு வருடங்கள் கடுமையாக உழைத்தார்.
காஷ்மீர் பார்டருக்கு சென்று முகுந்த் குறித்து ஆராய்ந்து அவரின் பெற்றோர் மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் முகுந்த் பற்றி கேட்டு விசாரித்து ஒரு முழுக்கதையாக கொடுத்திருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. அதனால் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் ஒன்றிப்போனது. மேலும் இந்து ரெபாக்கா வர்கீஸாகவே நடித்தார் என்பதை விட சாய்பல்லவி வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
படம் வெளியாகி 300 கோடி வசூலை அடைந்தது. விக்ரம் படத்திற்கு பிறகு அமரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு பெரிய லாபம் ஈட்டிய திரைப்படமாகவே அமரன் திரைப்படம் அமைந்தது. ஒரு பயோபிக் என்றாலும் கதையை நகர்த்திய விதம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தொடர்ந்து பாராட்டுமழை வந்துகொண்டே இருந்தன.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் செந்தில் பாலாஜி அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயனை மட்டும் கொண்டாடுவது சரியில்லை. படம் முடியும் 20 நிமிஷத்திற்கு முன்னாடியே சிவகார்த்திகேயன் இறந்துவிடுவார். அதன் பிறகு அந்த 20 நிமிடங்கள் அந்தப் படத்தை தூக்கிப் பிடித்தது சாய்பல்லவிதான். அவரின் எமோஷனல் ஆக்டிங்தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.
உடனே சிவகார்த்திகேயனை எல்லாரும் தூக்கி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. சாய்பல்லவி இல்லைனா அந்தப் படம் காலிதான் என கூறியிருக்கிறார்.

