ஆஸ்கர் விருது 2025: யாருக்கெல்லாம் விருது?.. லிஸ்ட் இதோ!....

by Murugan |   ( Updated:2025-03-03 04:55:34  )
oscar
X

Oscar Award 2025: ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 96 முறை விருதுகள் கொடுக்கப்பட்ட நிலையில் இப்போது 97வது முறையாக விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியாகி வருகிறது. இந்த முறை சிறந்த படமாக அனோரா (Anora) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக The Brutalist படத்தில் நடித்த அட்ரியன் பிராடி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


சிறந்த நடிகைக்கான விருது Anora படத்தில் நடித்த மைக்கி மேடிசனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குனருக்கான விருது அதே படத்தை இயக்கிய சீன் பேக்கருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி யாருக்கெல்லாம் விருதுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான பட்டியல் இதோ:

சிறந்த துணை நடிகர் விருது - கீரன் கல்கின் (The Real Pain)

சிறந்த துணை நடிகை விருது - ஜோ சல்டானா (Emilia Perez)

சிறந்த சர்வதேச திரைப்படம் விருது - ஐயம் ஸ்டில் ஹியர் (I’m Still Here) – பிரேசில்.

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருது - அனோரா (Anora)

சிறந்த தழுவல் திரைக்கதை விருது - கான்க்ளேவ் (Conclave)

சிறந்த ஒரிஜினல் இசை விருது - தி புருடலிஸ்ட் (The brutalist).

சிறந்த ஒளிப்பதிவு விருது - தி புருடலிஸ்ட் (The brutalist)

சிறந்த எடிட்டிங் விருது - அனோரா

சிறந்த ஒலி அமைப்பு விருது - டியூன் 2 (Dune 2)

சிறந்த விஷுவல் எபெக்ட் விருது - டியூன் 2 (Dune 2)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் விருது - ஃப்ளோ (Flow)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (In the Shadow of the Cypress).

சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட்

சிறந்த ஆவண குறும்படம் -தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா

சிறந்த ஒரிஜினல் பாடல் – எமிலியா பெரெஸின் (Emilia Perez) எல் மால் (El Mal ).

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) – விக்கெட் (Wicked).

சிறந்த ஒப்பனை – சப்ஸ்டன்ஸ் (Substance)

சிறந்த உடை – விக்கெட் (Wicked)

இது போக இன்னும் வெளிநாட்டு மொழி படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா, குனீத் மோங்கா தயாரித்த அனுஜா என்ற குறும்படம் மட்டும் சிறந்த குறும்படம் (லைவ் ஆக்சன்ன்)' பிரிவில் தேர்வாகியிருந்தது. இது விருது பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வழக்கம்போல் இந்த முறையும் இந்திய படத்திற்கு விருது கொடுக்கப்படவில்லை.

Next Story