Categories: Cinema News OTT

ஓடிடியில் இந்த வார ஹிட் திரைப்பட ரிலீஸ்… வெளியான சூப்பர் அப்டேட்

OTT Release: தமிழ் ரசிகர்கள் சில வருடங்களாகவே திரையரங்க ரிலீஸை விட ஓடிடி ரிலீஸிருக்கு தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த சுவாரசிய அப்டேட்கள்.

இந்த வாரம் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் முன்னணி பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தாலும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. மிக நீளமான படம் என்பதால் படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இருந்தும் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

ஹிப்ஹாப் தமிழா மற்றும் நட்ராஜ் இருவரும் நடித்த கடைசி உலகப் போர் திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படமும் ப்ரோமோஷனில் ஹிட்டடித்த நிலையில் வசூலில் கோட்டை விட்டது.

இது மட்டுமல்லாமல் மர்ம தேசம் சீரியலின் இயக்குனர் நாகா இயக்கத்தில் வெப் தொடரான ஐந்தாம் வேதம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.ஜீ5 ஓடிடியில் வர இருக்கும் இத்தொடரில் சாய் தன்ஷிகா முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்