பராசக்தி படத்திற்கு புது ரூட்டில் வந்த சிக்கல்!.. எப்படி சமாளிக்க போறாங்களோ!…
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 1960களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை சுதா கொங்கரா எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே புறநானுறு என்கிற தலைப்பில் சூர்யாவை வைத்து இப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுதா கொங்கரா. ஆனால் சில காரணங்களால் சூர்யா இதிலிருந்து விலகிக் கொள்ள தற்போது பராசக்தி என்கிற தலைப்பில் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. அதோடு பொங்கலுக்கு இப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜயின் ஜனநாயகன் 9ம் தேதி வெளியாகியுள்ள நிலையில் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
தற்போது உருவாகும் எல்லா படங்களும் ஓடிடி வியாபாரத்தை நம்பி இருக்கிறது. ஏனெனில் அதில் கணிசமான தொகை கிடைக்கிறது. ஆனால் பராசக்தி படத்தை அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் இதுவரை வாங்கவில்லை. இந்த படம் ஹிந்தி மொழிக்கு எதிராக இருப்பதால்தான் வாங்க மறுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த காரணத்தை காட்டித்தான் சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறினார் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தை வாங்க முடியாது என அமேசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் சொல்லிவிட்டாலும் ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. படம் ரிலீசான பின் டிஜிட்டல் உரிமையை கொடுப்பது பற்றி பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருக்கிறார்களாம். அமரன் போலவே பராசக்தி படமும் சிவகார்த்திகேயனின் கரியரில் ஒரு முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
