தக் லைப் ஓடிடி உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!.. விஜய்க்கே டஃப் கொடுப்பார் போல!...

Thug life: தமிழ் திரையுலகில் மணிரத்னமும், கமல்ஹாசனும் முக்கிய ஆளுமைகளாக வலம் வருகிறார்கள். இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்றாலும் இணைந்து வேலை செய்தது நாயகன் எனும் ஒரே படத்தில்தான். அதன்பின் 36 வருடங்கள் இருவரும் அவரவர் பாதைகளில் பயணித்தனர்.

கடந்த சில வருடங்களாகவே கமலின் படங்கள் பெரிய வசூலை பெறவில்லை. அதோடு, பிக்பாஸ், அரசியல் என கமலின் படங்கள் 4 வருடங்கள் வெளியாகவில்லை. அதன்பின் லோகேஷின் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து அப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

எனவே, கமலின் மார்கெட் மீண்டும் மேலே போனது. எனவே, ஒருபக்கம் மணிரத்னமும் பொன்னியின் செல்வம் ஹிட் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்கள். அப்படி உருவான திரைப்படம்தான் தக் லைப். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னமும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி கமலுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன்பின் அவர்கள் விலகவே சிம்பு உள்ளே வந்தார். எனவே, கதையை மாற்றினார் மணிரத்னம். இப்போது தக் லைப் படத்தில் கமலும், சிம்புவும் மட்டுமே இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

எனவே, இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 2025ம் வருடம் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகவிருக்கிறது. பத்து தல படத்திற்கு பின் சிம்பு நடித்திருக்கும் படம் என்பதால் சிம்பு ரசிகர்களும் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமை அதாவது ஓடிடி உரிமை மட்டும் 149 கோடிக்கு விலை போயிருப்பதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது. சமீபகாலமாக ஓடிடி உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதில்லை. அப்படியிருக்க தக் லைப் படம் இந்த அளவுக்கு விலை போயிருக்குமா என்பது தெரியவில்லை.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it