ஓவியாவின் வீடியோ திட்டமிட்ட சதி?! எவ்வளவு தில்லான பொண்ணுன்னு தெரியுமா?

by sankaran |   ( Updated:2024-10-13 08:43:38  )
oviya
X

ஹேமா கமிட்டி மலையாளத்தில் ஆரம்பித்து இந்தி வரை அதன் வீச்சு போய்க்கிட்டே இருக்கு. யாரெல்லாம் தவறான வேலைகள் பண்ணினாங்களோ அவங்க எல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. தொடர்ச்சியா ஏன்யா நடிகைகள் மேல வன்மத்தைக் கொட்டுறீங்க என்கிற கேள்வி எழுது. அவங்களும் ஒரு சக மனுஷி தானே.

திரையில் வந்து கிளாமரா டிரஸ் போட்டுட்டா என்ன வேணாலும் சித்தரிச்சிருவீங்களா அப்படிங்கற கேள்வி எழுகிறது என பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.

ஓவியாவைப் பற்றி ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியலை. சோஷியல் மீடியாவில் அந்த வீடியோவில் சில காட்சிகளை எடுத்து இந்த டாட்டூவைப் பார்த்தியா யார் போட்டுருக்குது? இந்த முகத்தை பாரு. யாரோடது? என இதை வச்சி டீகோடு பண்ணிக்கிட்டு இருக்காங்க.

உண்மைத்தன்மையா? சித்தரிக்கப்பட்டதான்னு நிச்சயமா சொல்ல முடியாது. ஒருவரை எந்தளவு பழி வாங்கணுமோ அந்த அளவு தொழில்நுட்பம் வந்துடுச்சு. ஏஐ, டீஏஜிங்னு. இது எவ்வளவு கேவலமான விஷயம்? இது தேவைதானா?


கிரண் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காத போது தன்னோட கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவுல விற்கிறாங்க. என்ன வேணாலும் விமர்சனம் பண்ணுங்க. நான் ஆன்லைனில் விமர்சனம் பண்ணினேன்னு சொன்னாங்க. ஐ டோன்ட் கேர்னு சொல்லிட்டாங்க. அதே மாதிரி தான் ஓவியாவும். அவர் மீது தொடர்ச்சியா ஒரு வன்மம், தாக்குதல். ஏன் அப்படின்னு ஒரு விஷயம் எழுகிறது. களவாணி படத்துல ஓவியா சூப்பர்ஹிட்.

மெரினா, மூடர்கூடம்னு நடிக்கிறாங்க. ஆனா அதெல்லாம் பெரியளவில் ஹிட் ஆகலை. அவரோட மேனேஜர் வந்து எல்லாப் படத்துக்கான வாய்ப்புகளையும் ஓகே பண்ணிட்டு செக் வாங்கிக்கிட்டே இருந்தாராம். அதனால் நல்ல கதையைத் தேர்ந்தெடுக்காம பட வாய்ப்புகளும் இல்லாம திறமையும் குறைந்து போனதாகவும் ஓவியா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாங்களாம்.

ஓவியா ஒரு துணிச்சலான பெண். அவரோட சோஷியல் மீடியாவுல பார்த்தா சரக்கு பாட்டிலோட போஸ் கொடுத்து நான் இப்படித்தான் இருப்பேன். ஏன் இருக்கக்கூடாதா? என்ன காரணம்? எங்க வலிக்குதுன்னு கேட்பாராம். இப்போ பிக்பாஸ்சோட வெற்றிக்குக் காரணமே ஓவியா தான். அவர் பேசிய ஓபன் டாக் தான். உள்ளுக்குள்ள இருக்குற விஷயத்தை வெளிப்படுத்தும்போது நான் பார்க்குற ஆள் வேற. இதுதான் நிஜம் அப்படின்னு பார்வையாளருக்குப் போய்ச் சேருது.

'ஓவியா ஆர்மி'ன்னு நிறைய பேர் அவங்களுக்கு ஆதரவா வந்து பிக்பாஸ்சை வெற்றிப் பெற வைக்குது. வெளிய வந்த பிறகு 90எம்எல் படத்தை நடிச்சாங்க. அது தான் பெரிய பின்னடைவை உண்டாக்கிடுச்சு. இன்னும் நல்ல கதையை செலக்ட் பண்ணி நடிச்சிருக்கலாம். இப்போ பிக்பாஸ் சீசன் 8 பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல திட்டமிட்டு ஓவியாவோட ஏதாவது ஒரு விஷயத்தை அடிச்சி விடலாம்னு பண்ணிருக்கலாம். வெளியே இருந்து செய்றது தான்.

நான் யாரையும் சொல்லலை. இந்த நேரத்துல இந்த வீடியோ வச்சி அவர்களைப் பிரிச்சிப் பிரிச்சி இவங்க தான்னு சொல்றதுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது? தொழில்நுட்பம் தான் அது. மோசமான விஷயம். எனக்கு திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை இல்லை. நான் இப்படியே இருந்துட்டுப் போயடறேன்னு கூட ஓவியா சொல்லி இருந்தாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story