சிவகார்த்திகேயன் ரசிகர்ளுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த பராசக்தி படக்குழு
பராசக்தி ப்ரமோ பாடல் இன்று வெளியானது.
சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி மற்றும் அதர்வா நடித்து வெளிவர உள்ள படம் பராசக்தி. சுதா கொங்கரா இஅயக்கத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
1960களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. உதயனிதி மகன் இன்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விஜய் நடிப்பில் வெளிவரும் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற அடி அலையே அலையே என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. பாடல் துவக்கத்தில் அமரன் பாடலை நினைவு படுத்தினாலும் நன்றாகவே உள்ளது.
