Parasakthi: அவசரப்பட்டியே குமாரு!.. பராசக்தி ரிலீஸில் இருக்கும் சிக்கல்!.. பொங்கலுக்கு வருமா?..
விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்:
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல ஒரு காட்சி வந்தது. எனவே, விஜய் தனது இடத்தை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்று விட்டார் என பலரும் பேசினார்கள். ஆனால் சிவகார்த்திகேயனோ ‘அப்படி நினைத்து நானும் துப்பாக்கி வாங்கவில்லை. அவரும் கொடுக்கவில்லை’ என சொல்லி இருந்தார்.
ரெட்ஜெயண்டால் ஜனநாயகனுக்கு சிக்கல்:
ஆனால் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி வெளியாகிறது என செய்திகள் வெளியானதும் துப்பாக்கி கொடுத்தவரிடமே சிவகார்த்திகேயன் மோதுகிறார் என பலரும் பேசினார்கள். அதேநேரம் ஜனநாயகன் வெளியாகிய ஐந்து நாட்கள் கழித்துதான் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. ஆனாலும் பராசக்தி படத்தை வெளியிடப் போவது ரெட் ஜெயின் நிறுவனம் என்பதால் அதிக தியேட்டர்களை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அப்படி செய்தால் ஏற்கனவே ஜனநாயகன் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களையும் அவர்கள் அபகரிப்பார்கள் என்கிறார்கள் சிலர்.
ஒருபக்கம் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதிலும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் விஜய்யோடு தனது படம் மோதுவதை சிவகார்த்திகேயனே விரும்பவில்லையாம். அதற்கு ஏற்றவாறு தயாரிப்பாளர் ஐடி ரெய்டில் சிக்க பொங்கலுக்கு படம் ரிலீஸ் இல்லை என அவரிடம் சொல்லிவிட்டனர். ஆனால், அதன்பின் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்து படத்தை வேகமக சுருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பராசக்திக்கு இருக்கும் சிக்கல்:
படத்தின் ஒரு முக்கிய பகுதிக்கு ஒரு செட் அமைக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அந்த செட்டை அமைக்கவே ஒரு மாதமாகும். அதன்பின் படப்பிடிப்பு ஒரு மாதம் என்றால் படத்தை முடித்து பொங்கலுக்கு வெளியிட முடியுமா என்கிற அச்சம் வந்திருக்கிறது. எனவே செட்டுக்கு பதிலாக ஹைதராபாத்தில் ஒரு லைவ் லொகேஷனை தேர்ந்தெடுத்து அதில் படபிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அதோடு, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் ரவி.கே.சந்திரன் பவன் கல்யாணின் OG பட வேலையில் பிஸியாக இருப்பதால் அவரின் உதவியாளரை அனுப்பி ‘இவரை வைத்து காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டாராம். அதுபோக Graphics மற்றும் VFX தொடர்பான வேலையும் நிறைய இருப்பதால் படம் தாமதமாகும் என சொல்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற முடிவில் படக்குழு வேகமாக படத்தை எடுத்து வருகிறார்கள். ஒருவேளை திட்டமிட்டபடி வேலைகள் முடியாவிட்டால் பராசக்தி பொங்கலுக்கு வெளியாகாது என சிலர் சொல்கிறார்கள்.
