பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா கேரக்டர் இந்த பிரபலத்தின் உண்மை கதையா? இது என்ன புது ட்விஸ்ட்டு?
Parasakthi: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் ஸ்ரீலீலா கேரக்டர் குறித்து தற்போது ஒரு விஷயம் கசிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்கள் ஆண்களாக தான் இருக்கின்றனர். ஆனால் பெண் இயக்குனராக உள்ளே வந்து வெற்றியும் கண்டவர் என்னவோ இதுவரை சுதா கொங்கரா மட்டும் தான். அவரின் இறுதிச்சுற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அப்படத்தினை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தினை இயக்கினார். அப்படம் உண்மை வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. படமும் ஆஸ்கார் வரை சென்றது.
இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, நஸ்ரியா, விஜய் வர்மா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பில் புறநானூறு என்னும் திரைப்படத்தை இயக்க இருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் அந்த நேரத்தில் நடிகர் சூர்யா பாலிவுட் பக்கம் பிஸியாகி விட்டதால் இப்படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவானது. அவர் மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பும் போதும் அவருடைய கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருப்பதால் இந்த படத்தில் உடனே நடிக்க முடியாமலும் போனது.
இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்க இருந்த அதே கேரக்டரில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். துல்கர் கேரக்டரில் அதர்வாவும், நஸ்ரியா கேரக்டரில் ஸ்ரீ நிலாவும், விஜய் வர்மா கேரக்டரில் ரவி மோகனும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இப்படம் 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். இதில் நடிகை ஸ்ரீலீலாவின் கேரக்டரை தெலுங்கு பேசும் பெண்ணாக வடிவமைத்திருக்கிறார் சுதா கொங்கரா. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட சுதா கொங்கரா ஸ்ரீலீலாவின் கேரக்டரை தன்னை கொண்டு தான் உருவாக்கி இருக்கிறாராம்.
தன்னை குளோரிபை பண்ணுகிற விதமாக இப்பாத்திரத்தை உருவாக்கி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தெலுங்கு பேசுவோரின் பங்கும் உண்டு என்பதை சொல்வதற்காக அதர்வா கதாபாத்திரத்திற்கு உதவுகிறவராக நாயகி ஸ்ரீலீலா பாத்திரம் உருவாக்கப்பட்டிள்ளதாம்.
இந்தி எதிர்ப்பு போராட்டப் பின்னணியில் அண்ணன் - தம்பி பாசத்தை சொல்லும் பாசமலர் வகை கதையாக இருப்பதால் தான் பராசக்தி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.