Parasakthi: பராசக்தி ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தேதி குறிச்சிட்டாங்க!.. திடீர் தளபதி பயந்துட்டாரா?!...

அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்ததால் சிவகார்த்திகேயன் ரேஞ்ச் சினிமாவில் உயர்ந்துவிட்டது. அவரின் சம்பளமும் 60 முதல் 70 கோடியாக உயர்ந்துவிட்டது. ஒருபக்கம் விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அவரின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என பலரும் பேச ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனும் அதை நம்பினார்.
விஜய் கொடுத்த துப்பாக்கி: கோட் படத்தின் இறுதி காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு போவது போல் காட்சி வர பலரும் அதை அந்த கோணத்தில்தான் பார்த்தார்கள். ஆனால் ‘யாரின் இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது’ என தத்துவம் சொன்னார் சிவகார்த்திகேயன். வெளியே அப்படி பேசினாலும் உள்ளுக்குள் விஜயின் இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகவே பலரும் பேசுகிறார்கள். எனவே அவரை திடீர் தளபதி என ட்ரோலும் செய்கிறார்கள்.
ஜனநாயகனுக்கு போட்டி: ஒருபக்கம் விஜயின் ஜனநாயகன் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே சிவகார்த்திகேயன் விஜயோடு போட்டி போடுகிறார் என பரவலாக பேசப்பட்டது. ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி படம் ஜனவரி 14-ஆம் தேதியும் வெளியாகிறது.
பராசக்தி ஃபர்ஸ்ட் சிங்கிள்: எப்படிப் பார்த்தாலும் இது போட்டிதான். தமிழ் சினிமாவில் போட்டி என்பது புதிது இல்லை. ஆனால் விஜயோட போட்டி போடும் அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து இருக்கிறார் என்பதைத்தான் இங்கே பார்க்க வேண்டும்.ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வருகிற தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 20ம் தேதி வெளியிடப்பட குழு திட்டமிட்டுருக்கிறார்கள். இந்நிலையில் பராசக்தியின் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் அதே தேதியில் வெளியிடப் போகிறார்கள் என்கிற செய்தி கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த மாதம் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் பராசக்தி முதல் பாடலை வெளியிடலாம் என முடிவெடுத்து விட்டார்களாம். அநேகமாக அக்டோபர் 31ஆம் தேதி முகூர்த்த தேதி என்பதால் அந்த தேதியில் பராசக்தி படத்தின் முதல் பாடல் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. பராசக்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.