Vijay: விஜய் பேசிய பேச்சு! SKக்கு எதிரா இப்படி மாறும்னு நினைக்கலயே
Vijay: மேடை பேச்சில் நாகரிகம் என்பது மிகவும் முக்கியம். அது யாரா இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் குழந்தைகள் பெண்கள் பார்க்கும் போது நாகரிகம் கருதி மேடையில் பேச வேண்டும். அப்படித்தான் விஜய் பேச்சும் இருக்கும் என எல்லாருமே எதிர்பார்த்தனர். ஆனால் மதுரையில் நடந்த மாநாட்டில் ‘ம’ வார்த்தையை மறைமுகமாக பேசியிருந்ததாக வலைப்பேச்சு அந்தணன் கூறினார். அதுவும் விஜயிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதே நேரம் அரசியல் தலைவர்களை எடுத்துக் கொண்டால் இதை விட அநாகரிகமாக பேசியதெல்லாம் இருக்கிறது. அந்தளவுக்கு விஜய் இறங்கவில்லை. அவரும் மேடை நாகரிகம் கருத்தில் கொண்டுதான் பேசியிருக்கிறார். ஆனால் விக்கிரவாண்டியில் பேசியதை விட மதுரையில் பேசியது அவர் மேல் உள்ள இமேஜை குறைத்துவிட்டதோ என்றும் வலைபேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.
ஆனால் ஸ்டாலினை அங்கிள் என்று சொன்னதெல்லாம் ஓவர். இதே ஜெயலலிதா இருந்திருந்தால் மம்மி என சொல்லியிருப்பாரா அல்லது ஆண்டி என்றுதான் சொல்லியிருப்பாரா? மாண்புமிகு பிரதமர் என்றால் மாண்புமிகு முதலமைச்சர் தான். இப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்றும் அந்தணன் கூறியிருக்கிறார். ஆனால் இந்த மாநாட்டில் அவர் பேசியது சர்ச்சையாகவும் பார்க்கப்படுகிறது. எப்படியும் இது விஜய் காதுக்கு போகும். அதனால் அடுத்த மேடையில் கொஞ்சம் அதை குறைத்துக் கொள்வார் என்றுதான் எதிர்பார்க்கிறேன் என்றும் அந்தணன் கூறினார்.
ஆனாலும் இதை முதலமைச்சர் சும்மா விடுவாரா? இது ஜன நாயகன் படத்திற்கு பெரும் சிக்கலாகவும் வாய்ப்பிருக்கிறது. திரையரங்குகளை ஒதுக்குவதில் கண்டிப்பாக பிரச்சினை ஏற்படும். எப்படியும் திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என யாருமே அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட மாட்டார்கள். ஆனால் இதெல்லாம் தெரியாமல் விஜய் இப்படி பேசியிருப்பாரா? படப்பிடிப்பு முடியும் வரை எந்த அரசியல் விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று முடிவெடுத்திருந்தாராம் விஜய். ஏனெனில் அங்கு அவர் பேசும் பேச்சால் படத்திற்கு எதும் சிக்கல் வரும் என்ற காரணத்தினால்தான்.
அதன் பிறகு படக்குழுவுடன் சேர்ந்து ஒரு மீட்டிங்கை போட்டிருக்கிறார். ஒரு வேளை என்னுடைய பேச்சால் படத்திற்கு சிக்கல் வரும் பட்சத்தில் அதற்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று விஜய் கூறியிருக்கிறாராம். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனநாயகனோடு மோதப்போவது சிவகார்த்திகேயனின் பராசக்தி. மதுரை மாநாட்டில் ரசிகர்களையும் தொண்டர்களையும் கவனித்திருப்போம். ஒரு தண்ணீர் வரவில்லை என்று சொன்னதற்கே பத்திரிக்கையாளரை விரட்டிய தொண்டர்கள்தான் தவெக தொண்டர்கள்.
இப்படி இருக்கும் போது பராசக்தியை வைத்து ஜன நாயகன் படத்திற்கு ஏதாவது பிரச்சினை செய்ய நினைத்தால் எல்லாரையும் விட்டுவிட்டு சிவகார்த்திகேயனை டார்கெட் செய்து விடுவார்கள். அதனால் இது சிவகார்த்திகேயனுக்குத்தான் சிக்கல் என இந்த தகவலை அந்தணன் கூறியிருக்கிறார்.
