நல்லவனா இருந்தா விட மாட்டீங்களே! மீண்டும் முருங்க மரம் ஏறும் பார்த்திபன்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் பார்த்திபன். நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த இயக்குனராகவும் பார்க்கப்படுகிறார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். சமீபத்தில் விஜயை பற்றி பேசி சோசியல் மீடியாக்களில் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறார் பார்த்திபன். இன்று எஸ்.ஆர்.எம் மருத்துவமனை நடத்திய ஒரு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஜித் பற்றியும் விஜய் பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார்கள். சில தினங்களுக்கு முன் அஜித் கொடுத்த பேட்டியை பற்றியும் கூறியுள்ளார். அஜித் சொன்னதும் 100 சதவீதம் உண்மைதான் என்றும் பேசியுள்ளார். மேலும் அவருடைய அடுத்தடுத்த படங்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார்கள். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம்.
அது போக மலையாளம், கன்னடம் என படு பிஸியாக இருக்கிறாராம். ‘அடுத்த சிஎம் நான்தான்’ என்ற படத்தின் போஸ்டை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் கட்டாயமாக முடிக்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு ஒரு கம்பேக் கொடுத்த படம் என்றால் அவரே இயக்கி நடித்த புதிய பாதை திரைப்படம்தான்.
அந்தப் படத்தின் அடுத்த வெர்ஷனை எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறினார். பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் நடித்தார். ஆனால் புதிய பாதை இரண்டாம் பாகத்தில் நானே நடித்து நானே தயாரிக்க போகிறேன் என்றும் கூறியுள்ளார். இதுவரை எனக்கு புடித்த கதையை அதாவது ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்களை எடுத்து வந்தேன்.
இனிமே மக்களுக்கு புடித்த மாதிரி அதாவது கமெர்ஷியல் படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இளமையாக இருக்கும் போதே இப்படி மாதிரியான படங்களில் நடித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார் பார்த்திபன். புதிய பாதை படத்தில் நல்லவனாகவும் கெட்டவனாகவும் தெரிகிற மாதிரியான கேரக்டரில் நடித்திருப்பார் பார்த்திபன். பெண்கள் விஷயத்தில் வீக் என்பதை போல் அந்த கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதனுடைய அடுத்த வெர்ஷன் எந்த மாதிரியான கதை என தெரியவில்லை. அவருடைய புதிய முயற்சி, சொல்ல வரும் கருத்து வித்தியாசமாக இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் அது அங்கீகரிக்கப்படாமல் போகிறது. பொறுத்திருந்து பார்த்த பார்த்திபன் இப்போது மற்றவர்களின் ரூட்டை கையில் எடுத்திருக்கிறார். இதாவது அவருக்கு கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
