1. Home
  2. Cinema News

பேடித்தனத்தின் உச்சம்! விஜயுடனான சந்திப்பு.. தவெக கட்சிக்கு இருக்கும் பெரும் நெருக்கடி

vijay

 நாளை விஜய் கரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41பேர் சேர்ந்த குடும்பங்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் இன்று மும்முரமாக நடந்து வருகின்றன. இது சம்பந்தமான வழக்கு இப்போது சிபிஐக்கு  மாற்றப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 30 நாள்களுக்கு பிறகு விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளார்.

இதுவரை எங்குமே நடக்காத வகையில் நாளை அந்த சந்திப்பு நடக்க உள்ளது. இழவு விழுந்த வீட்டிற்கு சென்று  துக்கம் விசாரிப்பதுதான் முறை. ஆனால் முதன் முறையாக தன் சொந்தங்களை இழந்த, மகன்களை இழந்த, மனைவியை இழந்த, கணவன்மார்களை இழந்த என உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பேர் வழியில் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொல்ல இருக்கிறார் விஜய்.

இது பல பேருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடி சென்றுதான் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்கள்தான் ஆகின்றது. வீட்டில் தண்ணியை போட்டுக் கொண்டு 30 நாள்களும் வெளியில் தலைகாட்டாத விஜய், இவருக்கு எதுக்கு கட்சி என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களில் 5குடும்பங்கள் விஜயை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கரூரில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர். அதன் பிறகு ஒரு பெரிய அரங்கில் அவர்களை விஜய் சந்திக்க உள்ளார். இதற்காக கரூரில் இருந்து ஊட்டி கொடைக்கானல் டூர் போவது மாதிரி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொருவரும் பேருந்தில் ஏறுகின்றனர்.

20 லட்சத்தை தூக்கி போட்டால் சாவுக்கு காரணமானவன் காலை பிடிப்பீர்களா? ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கேவலப்படுத்திவிட்டீர்களே? இது பேடித்தனத்தின் உச்சம் என்றெல்லாம் பல தரப்பிலிருந்து கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர். இது விஜயின் கட்சிக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்குமா என்றும் பல பேர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.