
Cinema News
Vijay TVK: வரலாறு தெரியாம பேசும் தற்குறி! விஜய்க்காக பேசி ஆப்பு வாங்கிய பேரரசு..
Vijay TVK:
கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் நிருபர் கேள்வி கேட்டார். இந்த மாதிரி நடந்துவிட்டது. அவர் போகிறார். போகும் போது பத்திரிக்கையாளர்கள் எல்லாரும் கேள்வி கேட்குறாங்க. பதில் சொல்லமாட்றாரு. விமான நிலையத்திற்குள் போனதும் உள்ளே ஒரு சில பேருடன் நின்று போட்டோ எடுக்கிறார். ஸ்மைல் பண்றாரு. இதை எப்படி பார்க்கிறீர்கள் என நிருபர் கேட்டார். அதற்கு பேரரசு ‘இல்ல, இல்ல அந்த வீடியோவை பார்த்தேன்.’
‘அந்த ஸ்மைல் பண்ண வீடியோ இப்போ எடுத்தது இல்லை. அது ஏற்கனவே எடுத்தது. சில விஷமிகள் அதை பயன்படுத்துகிறார்கள்.’ என்று சொன்னதும் அந்த நிருபர் குறுக்கிட்டு ‘அதைத்தான் நானும் சொல்ல வர்றேன். அது திமுக பரப்பியது என சொல்கிறார்கள். நீங்க சொல்லுங்க. அவர் அங்கு இருந்திருக்கணுமா? இருந்திருக்கக் கூடாதா’ என கேட்டார்.
அதற்கு பேரரசு ‘அவர் இருந்திருக்கக் கூடாது. ஏனெனில் சில சூழல். அங்கு இருக்கணுமா வேண்டாமா என்பதை யோசித்துவிட்டுத்தான் போகணும். இன்றைக்கு முதலமைச்சர் போயிடலாம். துணை முதல்வர் போகலாம். மற்ற அமைச்சர்களும் போகலாம். ஏனெனில் அவர்களுக்கு இன்றைக்கு அதிகாரபலம் இருக்கிறது. மேலும் காவல்துறை அவர்களுக்கு முழு உறுதுணையாக இருப்பார்கள்’
‘ஆனால் விஜய் சாருக்கு அதிகாரப்பலம் இல்லை. அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார். ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர் திரும்பி போயிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்தோ இல்லை அவருக்கு எதுவும் அசிங்கமோ நடந்துடாது என்பதில் என்ன உத்திரவாதம்? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இறந்துவிட்டார். எல்லா கட்சித் தலைவர்களும் போனார்கள்’
‘ஆனால் கலைஞர் மட்டும் போகவில்லை. காமராஜருக்கு போனார் கலைஞர். ஏன் எம்ஜிஆருக்கு போகவில்லை. அங்கு போகமுடியாது. அங்கு என்ன சூழல் நடக்கிறது என தெரியாது. அதே போல்தான் விஜய் சாரும் அங்கு போகமுடியாது.’ என அந்த பேட்டியில் கூறினார். இதை பார்த்த நெட்டிசன்கள் உடனே பேரரசுவை திட்ட ஆரம்பித்துவிட்டனர். அதாவது எம்ஜிஆர் இறந்ததற்கு கலைஞர் போகவில்லை என யார் சொன்னது?
கலைஞர்தான் முதலில் அஞ்சலி செலுத்தினார். வரலாறு தெரியாமல் பேசக்கூடாது தற்குறியே. 1987 டிசம்பர் 24ல் எம்ஜிஆர் இறந்த போது கலைஞர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். விழுப்புரத்தில் செய்தி கேட்டு, செங்கல்பட்டில் இறங்கி சாலை மார்க்கமாக எம்ஜிஆர் வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்கே வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.
வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் பதிவிடும் அறிவு ஜீவிகள். இறந்த உடனே அவரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியவர் கலைஞர் என்றும் இறந்தவர்களில் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள் என்றும் நெட்டிசன்கள் சரமாரியாக பேரரசுவை கிழித்து வருகின்றனர்.