என்னையா இப்படி இறங்கிட்டீங்க!.. ரெட்ரோ படக்குழுவின் புதுவித புரமோஷன்.. வேற லெவல்!..

Actor Suriya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்த சூர்யா தற்போது ஒரு வெற்றி படத்திற்காக காத்திருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு முன்பு வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டு கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
கங்குவா தோல்வி: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சூர்யா மெனக்கட்டு நடித்த திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் பாகுபலி போல மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்தது.
இந்த திரைப்படத்தை நம்பி நடிகர் சூர்யா பாலாவின் வணங்கான், சுதா கொங்கராவின் புறநானூறு ஆகிய இரண்டு படங்களையும் ரிஜெக்ட் செய்தார். கங்குவா திரைப்படத்தை மலைபோல் நம்பி இருந்த சூர்யாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனால் அடுத்தடுத்த திரைப்படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் நடிகர் சூர்யா.
ரெட்ரோ திரைப்படம்: நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கமிட்டான திரைப்படம் ரெட்ரோ. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கின்றது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கின்றார். இந்த திரைப்படம் ஒரு காதல் கலந்த ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த திரைப்படம் வருகிற மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது இன்று இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி டீச்சர் வெளியானது மேலும் படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.
புதுவித புரமோஷன் : ரெட்ரோ படக்குழுவினர் படத்தை புரோமோஷன் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தின் இடைவெளியில் பல திரையரங்குகளில் ரெட்ரோ திரைப்படத்தின் டீசர் வெளியானது. மேலும் திரையரங்குகளுக்குள் பல இடங்களில் ரெட்ரோ திரைப்படத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் நல்லா பிரமோஷன் செய்கிறீர்கள் என்று கூறி வந்தார்கள்.
தற்போது ஒரு படி மேலே சென்று வித்தியாசமான புரோமோஷனை கையில் எடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். அதாவது படத்தின் படப்பிடிப்புக் காட்சியை காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் வாரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை காமிக்ஸ் வடிவத்தில் வெளியிட இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இது என்ன புதுவித புரமோஷனா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.