பிரபுதேவாவின் பேச்சு குறித்து முன்னாள் மனைவி சொன்ன தகவல்... எவ்ளோ ஸ்ட்ராங்கான ஆளா இருக்காங்க?!

by SANKARAN |
பிரபுதேவாவின் பேச்சு குறித்து முன்னாள் மனைவி சொன்ன தகவல்... எவ்ளோ ஸ்ட்ராங்கான ஆளா இருக்காங்க?!
X

யூடியூப் சேனல் ஒன்றில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலாத் லதா தன் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து சில தகவல்களைச் சொல்லி இருக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

விஜய் டிவியில் உங்களில் அடுத்த பிரபுதேவா யார் என்ற நிகழ்ச்சியில் பிரபுதேவா பேசும்போது என்னோட முதல் பையன்தான் அடுத்த பிரபுதேவான்னு சொல்லி நெகிழ்ந்தார். ரொம்ப எமோஷனலா பேசினாரு. அதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ஆங்கர் ரமலாத் லதாவிடம் கேட்டபோது இப்படி பதில் சொன்னார்.

ஒரு அப்பாவா எல்லாருக்குமே அந்த ஃபீல் இருக்கும். அடுத்த பிரபுதேவாவா இவரு வந்துட்டாருல்ல. யாருக்கா இருந்தாலும் அந்த ஃபீல் இருக்கும். பர்ஸ்ட் குழந்தை எல்லாருக்கும் கிடைச்சிடாது. அது கடவுளின் வரம்னே சொல்லலாம் என்கிறார் ரமலாத்.

நெகடிவா பேசறது, புலம்புறதுன்னு எதுவுமே கிடையாதாம். பசங்களுக்கு என்ன பாடம் பிடிக்குமோ அதையேத் தான் படிக்க வைப்பாராம். பசங்க எங்கே போனாலும் எங்கிட்ட சொல்வாங்க. சொல்லாம எங்கேயும் போக மாட்டாங்க. அப்பாவிடம் போய் இருக்கும்போதும் ஜாலியா இருப்பாங்க. பசங்களுக்கு ஏதாவது தேவைன்னா உடனே செய்து கொடுப்பார்.

எனக்கு 5 குழந்தை பெத்துக்கணும்னுதான் ஆசை. ஆனா சிசேரியன் என்றதால் அது முடியலை. என் பசங்களைத் திட்டுனதோ, அடிச்சதோ கிடையாது. பசங்களை அடிச்சி வளர்த்தா அதே பழக்கமான நாம என்ன பண்ணினாலும் அடிக்கிறாங்க. அதனால நாம என்னவேணாலும் பண்ணிட்டுப் போகலாம்னு நினைக்கத் தோணும். அதே மாதிரி ஃப்ரண்ட்லியா வளர்த்தா அவங்களா நம்மகிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவாங்க என்கிறார் ரமலாத்.

குழந்தைகளைத் தைரியமா வளர்க்கணும். தன்னம்பிக்கையை நம்மதான் உருவாக்கிக்கணும். நம்மளால முடியும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தாலே நாம குழந்தைகளை ரொம்ப அழகா வளர்த்துடலாம் என்கிறார் ரமலாத்.

ரமலாத்துக்கு முதல் குழந்தை உடல்நலம் இல்லாமல் தவறிவிட்டாராம். அந்த நேரம் ரொம்ப போராட்டம். முதல் பையனையே நினைச்சிக்கிட்டு இருந்தா இவங்க ரெண்டு பேரையும் வளர்க்க முடியாது. இவங்களும் சோகமாகவே இருப்பாங்க. சிரிக்க மாட்டாங்க. அதனால நான் என்னை மாத்திக்கிட்டேன். மாதந்தோறும் திருவண்ணாமலைக்குப் போயிடுவேன். எனக்குப் பிடிச்சது கடவுள் சிவா தான். மனசுக்கு கஷ்டமா இருக்கும்போது இவரைத்தான் நான் நினைப்பேன்.


டைவர்ஸ்சுக்கு அப்புறம் பெண்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். அப்படி இல்லன்னா எதையுமே ஃபேஸ் பண்ண முடியாது. அப்படின்னா கண்டிப்பா நமக்கு தைரியம் வரணும். யாருக்கிட்டேயும் டைவர்ஸ் ஆகிட்டான்னு கேட்கக்கூடாது. நமக்கு லவ் மேரேஜா இருந்தாலும் 2 வருஷம் கழிச்சி குழந்தைங்க மேலதான் லவ்வைக் காட்டுவோம். கணவர் மேல இருக்குற கோபத்தைக் குழந்தைங்கக் கிட்ட காட்டக்கூடாது என்கிறார் ரமலாத்.

பிரபுதேவா, நயன்தாராவுடன் வாழ்ந்து வருகிறார் என்றும் தன்னோட பிரிவுக்குக் காரணம் நயன்தாராதான்னு ரமலாத் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story