சம்பளமா இவ்வளவு கோடி வேணும்!.. கறார் காட்டும் பிரதீப் ரங்கநாதன்!. தப்பு புரோ!..
Pradeep Ranganathan: குறும்படங்களை இயக்கி வந்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பின் சினிமா இயக்க வேண்டும் என்கிற ஆசை வர ஒரு கதையை எழுதினார். முன்னணி ஹீரோக்களை சந்தித்து கதை கூட அவரால் சொல்ல முடியவில்லை. பல முயற்சிகளுக்கு பின் ஜெயம் ரவியை சந்தித்து ஒரு கதை சொன்னார்.
கதை நன்றாக இருந்தாலும் 'இவரால் கதையை இயக்க முடியுமா?' என்கிற சந்தேகம் ஜெயம் ரவிக்கு ஏற்பட்டது. அது ஒன்றும் தப்பில்லை. ஏனெனில், சினிமாவை இயக்கிய அனுபவம் பிரதீப்புக்கு இல்லை. எனவே 'நீ சொன்ன கதையில் ஒரு காட்சியை ஷூட் செய்து வந்து என்னிடம் காட்டு. நன்றாக இருந்தால் நடிக்கிறேன்' என சொல்லிவிட்டார்.
அப்படி ஒரு காட்சியை இயக்கிக் கொண்டு வந்து பிரதீப் காட்ட ஜெயம் ரவிக்கு நம்பிக்கை வந்தது. அப்படி அவர் நடிக்க சம்மதித்த திரைப்படம்தான் கோமாளி. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து ஜெயம் ரவியின் சம்பளமே உயர்ந்தது. அதன்பின் சில வருடங்கள் கழித்து பிரதீப் நடித்து இயக்கிய படம்தான் லவ் டுடே.
இந்த காலத்தின் யங்ஸ்டர்ஸ் எப்படி இருக்கிறார்கள்?. அவர்களின் காதல் வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுருந்தார். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
எனவே, இனிமேல் நான் இயக்கும் படத்தில் நான்தான் ஹீரோ என அறிவித்தார் பிரதீப். அதோடு, மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கதை கேட்டார். இதில் ஒரு படம்தான் டிராகன். லவ் டுடே படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது.
லவ்டுடே படத்திற்காக 1.5 கோடி சம்பளம் வாங்கிய பிரதீப் இப்போது டிராகன் படத்திற்கு 12 கோடி சம்பளம் பேசி இருக்கிறாராம். ஏஜிஎஸ் நிறுவனம் எவ்வளவு கேட்டும் சம்பளத்தை குறைக்க முடியாது என கறார் காட்டியிருக்கிறார். இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வர் மாரிமுத்து இயக்கி வருகிறார். பிரதீப் சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதால் அவரை வைத்து படமெடுக்க மற்ற தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்களாம். ஒருபக்கம், விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.கே என்கிற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.