1. Home
  2. Cinema News

மீண்டும் அந்த இயக்குனருடன் இணையும் பிரதீப்!.. அடிச்சா லக்கி பிரைஸ்!.. செம ஜாக்பாட்!...

pradeep

பிரதீப் ரங்கநாதன்


கோமாளி படம் மூலம் இயக்குனராக ரசிகர்களிடம் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் நடிகராக மாறினார். இளசுகளுக்கு பிரதீப்பை மிகவும் பிடித்துப்போய்விட்டதால் இவரின் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே, இவரின் படங்கள் தொடர் ஹிட் அடித்து வருகின்றன.

குறைவான பட்ஜெட்டில் உருவாகும் இவரின் படங்கள் அதிக வசூலை பெறுவதால் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக பிரதீப் மாறியிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான டியூட் திரைப்படம் பிரதீப்புக்கு வெற்றிப் படமாக மாறி கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நடிகராக மாறி இருக்கிறார்.

’ஜென் சி’ என சொல்லப்படும் 20 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்ட இளசுகளுக்கு பிரதீப்பை மிகவும் பிடித்து போய்விட்டது. ஏனெனில் அவர்களை போலவே பேசுவது, நடந்துகொள்வது என அவரது உடல் மொழியும், பேச்சும் அவர்களை கவர்ந்திருக்கிறது. அதனால்தான் பிரதீப்பின் படங்களை வெறிகொண்டு பார்க்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரதீப்பின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

dude

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டியூட் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகிய நான்கு நாட்களாகி விட்ட நிலையில் இப்படம் 83 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறது. எனவே அடுத்து பிரதீப் ரங்கநாதன் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்த்து ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலேயே பிரதீப் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

பிரதீப் நடித்த லவ் டுடே படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரித்தது. அதில் அவர்களுக்கு நல்ல லாபம். அதேபோல் தற்போது டியூட் திரைப்படத்தையும் அவர்கள்தான் தமிழ்நாட்டில் வெளியிட்டார்கள்.  இதிலும் அவர்களுக்கு நல்ல லாபம். அடுத்து மீண்டும் பிரதீப்பை வைத்து படமெடுப்பதால் மீண்டும் பல கோடிகளை ஏஜிஎஸ் நிறுவனம் கல்லா கட்டும் என கோலிவுட்டில் பேசுகிறார்கள்.

கட்டுரையாளர்கள்