ஒரு சட்டையின் விலை இவ்வளவா? பிரதீப் ரங்கநாதனுக்கு வந்த வாழ்வ பாருங்க
இப்போது தமிழ் சினிமாவில் அதிகளவு தேடப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக அறிமுகமான இவர் தான் இயக்கிய இரண்டாவது படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கினார். லவ் டுடே திரைப்படம் இவரின் படைப்பையும் நடிப்பையும் பாராட்டிய திரைப்படமாக மாறியது. ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து இன்றைய தலைமுறையினரின் பல்ஸை பிடித்து பார்த்து இந்தப் படத்தை எடுத்தார்.
அவர் நினைத்ததை போலவே இளைஞர்கள் கொண்டாடும் திரைப்படமாக லவ் டுடே திரைப்படம் அமைந்தது. அதிலிருந்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களுமே தொடர்ச்சியாக வசூலில் சாதனை படைத்த படங்களாக மாறியது. லவ் டுடே படம் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதை போல் டிராகன் திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் டியூட் திரைப்படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான நான்கு நாள்களிலேயே இந்தப் படம் 83 கோடி வசூல் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஒரு சாதாரண மனிதனாக இந்த சினிமா துறையில் நுழைந்த பிரதீப் ரங்கநாதன் இப்போது தனுஷ் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் நடிகராக மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய பேட்டி ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. அதாவது இப்போது லைஃப் ஸ்டைல் மாறியிருக்கிறதா என்ற ஒரு கேள்வியை நிருபர் கேட்க, ‘ஆமா கண்டிப்பாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் ஸ்பென்சர் பிளாசாவில் 400 ரூபாய்க்கு ஷர்ட் வாங்கி போடுவேன். ஆனால் இப்போது அப்படியில்லை. அதனுடைய லெவல் கொஞ்சம் மாறியிருக்கிறது’
‘இப்போது ஒரு சட்டையின் விலையே 3000 லிருந்து 4000 வரை மாறியிருக்கிறது. இது எனக்கு சிரமமாகவும் இல்லை. லைஃப் ஸ்டைல்தான் மாறியிருக்கிறதே தவிர நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
