Dude: டியூட் சூப்பர் ஹிட்!. செம ஆஃபர் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ்.. பிரதீப் காட்டுல மழைதான்!...
லவ் டுடே, டிராகன், டியூட் என மூன்று தொடர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் கவனிக்கத்தக்க நடிகராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஜென் சி என சொல்லப்படும் 2கே கிட்ஸ்களின் பிரதிபலிப்பாக பிரதீப் இருப்பதால் இவரின் படங்களை இளசுகள் பெரிதும் விரும்புகிறார்கள். ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி இயக்குனராக ரசிகர்களிடம் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் நடிகராக களமிறங்கினார்.
முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. அடுத்து அஸ்வத் மாரி இயக்கத்தில் நடித்த டிராகன் படமும் அசத்தலான வெற்றியை கொடுத்தது. தற்போது கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டியூட் படமும் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. படம் வெளியாகி 6 நாட்களில் இப்படம் 100 கோடி வசூல் செய்து விட்டதாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
பிரதீப் ரங்கநாதன் அதிக சம்பளம் கேட்கும் நடிகராக இன்னமும் மாறவில்லை. டியூட் படத்தையே அவர் குறைவான சம்பளத்தில்தான் நடித்து கொடுத்தார். எனவே, பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களிடையே போட்டியே நிலவுகிறது இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரதீப்பை அழைத்து ‘எங்கள் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்.. நீங்க என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறோம்.. எப்போது கால்ஷீட் கொடுத்தாலும் ஓகே’ என கேட்டிருக்கிறார்களாம்.
எனவே மைத்ரீ மூவி மேக்கர்|ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு படத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்துள்ள LIK திரைப்படம் டிசம்பர் 28ம் தேதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
