தனுஷை நான் காப்பி அடிக்கிறேனா? யார் சொன்னது? பிரதீப் ரங்கநாதன் கேள்வி

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இப்போது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 100கோடி வசூல் என மற்ற நடிகர்களை எல்லாம் அண்ணாந்து பார்க்க வைத்து விட்டார் பிரதீப் ரங்கநாதன்.
இவர் ஏற்கனவே நடித்த லவ் டுடே படமும் சூப்பர் டூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் ரசிகர்களின் பல்ஸ் பார்த்து நடிப்பதில் இவர் கில்லாடி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் கூட. இவர் இயக்கி நடித்த படம்தான் லவ் டுடே.
படத்தின் திரைக்கதை அற்புதமாக இருந்தது. இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று அனைவரும் வியந்து பார்த்தனர். இவர் தமிழ்த்திரை உலகில் முதலில் அறிமுகமான படம் கோமாளி. இந்தப் படத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இயக்குனராக காலடி எடுத்து வைத்து நடிகராக பிரபலம் ஆனவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் வந்த படங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. கமர்ஷியல் ஹிட் தான்.
சமீபத்தில் வெளியான டிராகன் படத்தைப் பார்த்ததும் பிரதீப் ரங்கநாதன் நடிகர் தனுஷின் சாயலில் இருக்கிறார். அவரை மாதிரியும் காப்பி அடித்து நடிக்கிறார்னு நடிகர் பிரதீப் ரங்கநாதனை சிலர் விமர்சனம் செய்தார்கள்.
ஸ்கிரீன்ல பார்ப்பதற்கு நான் தனுஷ் சாரை காப்பி அடிப்பது போல் இருக்கு என்று சொல்கிறார்கள். நான் அவரை இமிடெட் பண்ண ட்ரை பண்ணல. ஒருவேளை என்னுடைய முகமும், நான் உடல்ரீதியாகவும் அவரைப் போல் இருக்கலாம்.
கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கு என் முகம் தான் தெரிகிறது. அதே போல், என்னுடைய இரண்டு படங்களும் தற்போது வரை நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனால் நான் நன்றாக நடிக்கிறேன் என்று நினைக்கிறேன் என்கிறார் பிரதீப் ரங்கநாதன்.