அவரை வச்சி படமெடுக்கணும்.. அது என் கனவு!.. பிரதீப் ரங்கநாதன் ஃபீலிங்!..
Pradeep Ranganathan: ஜெயம் ரவியை வைத்து கோமாளி திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக கால் பதித்தவர் பிரதீப் பிரங்கநாதன். அதன்பின் இனிமேல் ‘நான் இயக்கம் படத்தில் நானே ஹீரோ’ என முடிவெடுத்தார். மூன்று வருடங்கள் காத்திருந்து ஒரு கதையை உருவாக்கி லவ் டுடே என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து அதில் அவரே ஹீரோவாக நடித்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அஸ்வத் மாரி இயக்கத்தில் டிராகன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK ஆகிய இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்தார் பிரதீப். இதில் LIK படம் சில காரணங்களால் தாமதமானது. ஆனால் டிராகன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து பிரதீப் ரங்கநாதனை ஒரு முக்கிய நடிகராக மாற்றியது.
மேலும் டியூட்(DUDE) என்கிற படத்திலும் நடித்தார் பிரதீப் ரங்கநாதன். வருகிற தீபாவளிக்கு Dude மற்றும் LIK ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன் நடிகர் ஜாக்கிசானை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் தீவிர ரசிகன் நான். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதை என் கனவு என தெரிவித்திருக்கிறார்.
லவ் டுடே மெகா ஹிட் அடிக்கவே விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு பிரதீப்பை தேடிவந்தது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இருந்தது. ஆனால் ‘இனிமேல் நான் இயக்கம் படத்தில் நானே ஹீரோவாக இருப்பேன்’ என சொல்லி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
