தம்பி கார்த்தி அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணல!.. நைசா பிரதீப் கிட்ட கோர்த்து விட்டுட்டாராம்!..

இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், சிவகார்த்திகேயன் என பல பெரிய நடிகர்கள் படங்கள் வெளியானாலும் எந்த படமும் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்கிற வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணி நடிகர்கள் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை குறிவைக்காமல் மற்ற பெரிய விடுமுறை நாட்களை டார்கெட் செய்கின்றனர். இந்த ஆண்டு அஜித் குமாரின் விடாமுயற்சி பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படமும் ரிலீஸ் தள்ளிப்போனது.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியானது. அந்த படத்துக்குப் போட்டியாக சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியானது. விமர்சன ரீதியாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரெட்ரோ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து லாபம் அடைந்ததாக சூர்யா சக்சஸ் மீட் கொண்டாடினார்.
வரும் தீபாவளிக்கு சூர்யாவின் 45வது படம் (வேட்டை கருப்பு) வெளியாகும் என்றும் கார்த்தியின் சர்தார் 2 படம் தீபாவளிக்கு வெளியாகாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இன்று திடீரென பிரதீப் ரங்கநாதனின் Dude திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள Dude திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவுக்கு செம செக் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.