வீடியோவில் இருப்பது நானா?!.. இது யாருக்கும் நடக்கக் கூடாது!.. பிரக்யா நாக்ரா பதிவு!..

by Murugan |   ( Updated:2024-12-07 14:37:08  )
pragya nagra
X
பிரக்யா நாக்ரா

Pragyanagra: சமூகவலைத்தளங்களில் நடிகைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல வருடங்களாகவே மாஃபிங் மூலம் ஒரு பெண்ணின் உடல் மீது நடிகைகளின் முகத்தை மாற்றி அது இந்த நடிகைதான் என சொல்லி புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இதில், பிரச்சனை என்னவெனில் அதை பார்ப்பவர்கள் அதை உண்மை என நம்பி பலருக்கும் பகிர்கிறார்கள். முன்பெல்லாம் மாஃபிங் செய்து புகைப்படங்களை பகிர்ந்தார்கள். இப்போதெல்லாம் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டதால் போலி வீடியோக்களையே தயாரித்து இது இந்த நடிகைதான் என சொல்லி டிவிட்டர் போன்ற இணையதளங்களில் பகிர்ந்து விடுகிறார்கள்.

அது பார்க்கும் பலரும் அது உண்மை என நம்பி வீடியோக்களை பகிர அது டிரெண்டிங்கிலும் வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா என சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். அதன்பின்னர், இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா சைபர் கிரைமில் புகார் அளிக்க அதை உருவாக்கி வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.


சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஓவியா என சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். அது நான் இல்லை என ஓவியா மறுத்தார். காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். கடந்த 2 நாட்களாக எக்ஸ் தளத்தில் பிரக்யா நாக்ரா என சொல்லி பலரும் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

pragyanagra என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவிட்டு என்னிடம் அந்த வீடியோ இருக்கு. என்னை பின் தொடர்ந்து மெசேஜ் மூலம் என்னை தொடர்பு கொண்டால் உங்களுக்கு வீடியோ அனுப்புகிறேன் என கிளம்பினார்கள். பலரும் அப்படி சென்று அந்த வீடியோவை பார்த்தார்கள்.



இந்நிலையில், இது போலி வீடியோ. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என பிரக்யா நாக்ரா கூறியிருக்கிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் ‘தொழில் நுட்பம் நமக்கு உதவ வேண்டும். நம்மை அழிக்கவும், தவறான விஷயத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் பேய்க்குண்டம் கொண்ட ஒருவர் இதை உருவாக்குகிறார். அதை பலரும் பகிர்கிறார்கள். அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. இது போன்ற கடினமான சூழ்நிலைகளை கடந்து வருகிறேன். இந்த தருணத்தில் என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. இது போன்று மற்ற பெண்களுக்கு நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Next Story