விடுதலை 2-வில் கிஷோர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?.. மிஸ் பண்ணிட்டாரே!..

by Ramya |
viduthalai 2
X

viduthalai 2

விடுதலை 2: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், நடிகர் கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. விடுதலை 2 திரைப்படம் இப்படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் முதல் பாகம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

படத்தின் கதை:

விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் மூலமாக ஹீரோ என்கின்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் சூரி. படத்தில் போராளியாக வாத்தியார் என்கின்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவரின் பின்னணி கதையையும், அவர் எப்படி போராளியாக மாறினார் என்பதற்கான கதையை பயமாக வைத்து இரண்டாவது பாகத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.


படத்தில் விஜய் சேதுபதியின் சில அரசியல் வசனங்கள் ரசிகர்களிடையே தொய்வை ஏற்படுத்தியிருக்கின்றது. மற்றபடி வெற்றிமாறன் தனது ஸ்டைலில் இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக எடுத்திருக்கின்றார் என்று ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

படத்தின் வசூல்:

படம் வெளியாகிய முதல் நாளிலே இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கடந்த 2 நாட்களும் வார விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் சற்று அதிகரித்து இருக்கின்றது.

முதல் இரண்டு நாட்களில் இந்திய அளவில் 15 கோடி ரூபாயும், உலக அளவில் 20 கோடி ரூபாயும் விடுதலை 2 திரைப்படம் வசூல் செய்திருந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று சற்று சரிவை சந்தித்து இருக்கின்றது. அதன்படி நேற்று இந்த திரைப்படம் இந்திய அளவில் 7.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கின்றது.

பிரகாஷ் ராஜ்:

விடுதலை 2 திரைப்படம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. அவரின் பழைய கால வாழ்க்கை அவர் எப்படி போராளியாக மாறினார். அவரின் மனைவி, குழந்தைகள் ஆகியோரின் கதைகளை மையமாக வைத்து விடுதலை 2 திரைப்படத்தின் முதல் பகுதி அமைந்திருந்தது.


இரண்டாவது பகுதி விடுதலை படத்தின் முதல் பாகத்தின் கதையோடு ஒன்றி அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் கிஷோர் குமார் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நடித்திருப்பார். அவரை பின்தொடர்ந்து வந்தவர் தான் விஜய் சேதுபதி. முதலில் கிஷோர் குமார் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களாம்.

அவரை வைத்து படத்தின் காட்சிகள் சில எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தின் டேட் பிரச்சனைகள் மற்றும் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. தற்போது அவரை வைத்து எடுத்த சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story