பிரசாந்த் நீலின் அடுத்த படத்துக்கு ஹீரோ இவர்தான்!.. தரமான சம்பவம் லோடிங்!..
Prashanth Neel: கன்னட சினிமாவை இந்திய சினிமா ரசிகர்கள் கண்டு கொண்டதில்லை. அதற்கு காரணம் கவனம் ஈர்க்கும்படியான திரைப்படங்கள் அங்கு உருவாவதில்லை. மிகவும் சின்ன பட்ஜெட்டில் சின்ன படங்களே அங்கு உருவாகும். பெரும்பாலும் ஹீரோக்களை பில்டப் செய்தே எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். தொழில்நுட்பரீதியாகவும் கன்னட சினிமா வளராமல் இருந்தது.
கேஜிஎப்: இதை மாற்றியவர்தான் பிரசாந்த் நீல். அவரின் இயக்கத்தில் யாஷ் நடித்து வெளியான கேஜிஎப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன், இசை, ஒலி என எல்லா துறைகளிலும் அந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு பின் கேஜிஎப்-2 படம் வெளியாகி தமிழ், ஹிந்தி மொழிகளிலும் வசூலை அள்ளியது.
கேஜிஎப் 2: கேஜிஎப் 2 படத்தின் வெற்றி கன்னட சினிமா மீது எல்லோரின் பார்வையும் திரும்பிபார்க்க வைத்தது. அதன்பின், காந்தாரா படமும் கன்னடத்தில் உருவாகி தமிழகத்திலும் ஹிட் அடித்தது. கேஜிஎப் 2-வுக்கு பின் பிரபாஸை வைத்து சலார் என்கிற படத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். இந்த படமும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படமாக உருவானது.
சலார்: அடுத்து பிரசாந்த் நீல் சலார் 2-வை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் என சொல்லப்பட்டது. அதோடு, சலார் படத்தை நான் சரியாக எடுக்கவில்லை. அதனால்தான் அப்படம் நான் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. சலார் 2-வை மிகவும் கவனமாக எடுப்பேன் என சமீபத்தில் சொல்லி இருந்தார்.
இந்நிலையில், பிரசாந்த் நீலின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த படத்தில் ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம். இவர் சமீபத்தில் வெளிவந்த பகீரா படத்தில் நடித்திருந்தார். அதேபோல், மலையாள நடிகர்கள் டோவினோ தாமஸ் மற்றும் பிஜி மேனன் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.
சலார் 2-வை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பிரசாந்த் நீல் இயக்குவாரா என்பது தெரியவில்லை. அதேபோல், கேஜிஎப் 3 எப்போதும் வரும் எனவும் யாஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.