பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆகி அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சா!.. நண்பர்களுக்கு செம விருந்து போல!..

by SARANYA |
பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆகி அதுக்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சா!.. நண்பர்களுக்கு செம விருந்து போல!..
X

நடிகர் பிரேம்ஜி இந்து என்பவரை சென்ற ஆண்டு ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்துக்கொண்டார். எந்த ஆடம்பரமும் இன்றி மிக எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் அவரது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடிய பிரேம்ஜி தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரேம்ஜி மற்றும் இந்துவின் திருமணம் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் பிரேம்ஜியும் இந்துவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நட்பாகி, பின்னர் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் இரண்டு மகன்களில் மூத்த மகன் இயக்குநர் மற்றும் நடிகருமான வெங்கட் பிரபு, இளைய மகன் பிரேம்ஜி நடிகர், இவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். பொல்லாதவன், நீர்ப்பறவை, வடகறி, கோட், சந்திரமுகி 2, சத்திய சோதனை போன்ற பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் மட்டுமல்லாமல் சத்ய சோதனை, வல்லமை ஆகிய படங்களில் லீடு ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது முதலாம் ஆண்டு திருமணநாளை முன்னிட்டு சென்னை28 படத்தில் நடித்திருந்த தன் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். ஜெய், சுனில், வைபவ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு அலப்பறை செய்துள்ளனர்.

Next Story