ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்.. வைரலாகும் வீடியோ!

Priyanka mohan: தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் திடீரென விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னட படத்தில் நடித்து சினிமாவிற்குள் வந்தாலும் தெலுங்கில் நானியுடன் நடித்த கேங்லீடர் திரைப்படத்தில் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார் பிரியங்கா மோகன். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

முதல் தமிழ் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயன் டான், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படங்களில் முக்கிய இடத்தில் நடித்து அசத்தினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சரி போதா சனி வரம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு நடனமாடி வைரலாகி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே ரசிகர்கள் பிரியங்கா மோகன் இடம் செல்ஃபி கேட்கும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் தோரூரில் நடந்த வணிக வளாக திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது திடீரென மேடை சரிந்து லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா மோகன், தோரூர் விபத்தில் சிக்கி தற்போது நலமாக இருக்கிறேன். என்னை தொடர்புகொண்டு விசாரித்தவர்களுக்கு நன்றி.

விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா மோகன் கலந்து கொண்டு மேடை சரிந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Articles
Next Story
Share it