சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா.. இவங்களெல்லாம் அசைக்க முடியுமா?

குக் வித் கோமாளியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இவர்களுக்கு இடையேயான பிரச்சனை தீப்பற்றி எரிந்த நிலையில் பிரியங்காவின் ஒரு ஸ்டோரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரியங்காவால் தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்படுவதாக மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக திடீரென ஒரு பதிவை போட்டு ரசிகர்களை அதிர்ச்சி குள்ளாக்கியிருந்தார்.

கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் இப்போது ஐந்தாவது சீசனில் பயணித்து வருகிறது. இதுவரை குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனில் ஆங்கராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அதே சீசனில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டார்.இந்த நிலையில் தனது பணியை செய்ய விடாமல் பிரியங்கா டாமினேட் செய்வதாக மணிமேகலை கூறி சீசனில் இருந்து விலகினார். அதிலிருந்தே மணிமேகலைக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் பிரியங்காவுக்குஆதரவாக ஒரு குரூப்பும் பல்வேறு விமர்சனங்களை கூறி வந்தார்கள்.

இதுவரை இதைப் பற்றி பிரியங்கா எந்த ஒரு கருத்தும் பதிவிடாத நிலையில் நேற்று அவர் திடீரென ஒரு ஸ்டோரியை அவருடைய insta பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதாவது பேக் டு கிரைண்ட் என பதிவிட்டு திரும்பவும் வந்து விட்டதாக அந்த ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார்.

இதுவரை அயர்லாந்தில் பிரியங்கா இருந்ததாக வனிதா கூறி இருந்த நிலையில் மன நிம்மதிக்காக தான் அயர்லாந்து சென்றிருக்கிறார் என்றும் வனிதா பேசியிருந்தார் .இப்போது மீண்டும் வந்து விட்டதாக தனது ஸ்டோரியில் பிரியங்கா பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/stories/priyankapdeshpande/3467129190212584120?utm_source=ig_story_item_share&igsh=MW81bGV4dnd1cWhkag==

rohini
rohini  
Related Articles
Next Story
Share it