அட்லிக்கு ஆப்பு வைத்த பாலிவுட்!.. 1300 கோடி அடிச்சும் யூஸ் இல்லாம போச்சே!....

by Murugan |
atlee
X

atlee

Baby John: பாலிவுட்டில் நெப்போட்டிசம் என்பது உச்சத்தில் இருக்கும். புதிதாக யாரையும் வரவோ, வளரவோ விடமாட்டார்கள். அது கான் - களின் உலகம். தெலுங்கு சினிமாவை போலவே அங்கும் சில குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும். எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த சுசாந்த் சிங்கே தற்கொலை செய்து கொண்டார்.

அப்போதே பாலிவுட்டில் நெப்போட்டிசம் பற்றி சமூகவலைத்தளங்களில் ஹிந்தி ரசிகர்கள் அதிகம் விவாதித்தார்கள். ஹிந்தி பேசும் மாநிலங்களிலில் இருந்த வந்த ஒருவரே தற்கொலை செய்து கொண்டார் என்றால் தென் மாவட்டங்களிலிருந்து சென்றால் தரமாக கட்டம் கட்டுவார்கள்.


70,80களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றவர்கள் ஹிந்திக்கு சென்று படம் எடுத்தார்கள். கமல் நடிப்பில் வெளிவந்த ஏக் தேஜே கேலியோ படம் சூப்பர் ஹிட் ஆனதும் கமல் அங்கு பேசப்பட்டார். ஹிந்தியில் தொடர்ந்து நடித்திருந்தால் கமல் முன்னணி நடிகராக மாறியிருப்பார். ஆனால், அமிதாப்பச்சனே அதை காலி செய்தார்.

ஒரு படத்தில் கமலை தன்னுடன் நடிக்கவைத்து பாதி படம் வளர்ந்தபின் அந்த படத்தை டிராப் செய்துவிட்டார். கமல் நடித்தால் படம் டிராப் என செண்டிமெண்டாக யோசிக்க வைத்துவிட்டார். ரஜினிக்கு கூட அங்கு செகண்ட் ஹீரோ வேடம்தான். கோலிவுட்டிலிருந்து இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் பாலிவுட்டில் போய் கலக்கி இருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் கூட அமீர்கானை வைத்து கஜினி படம் எடுத்தார். இப்போது சல்மான்கானை இயக்கி வருகிறார்.


ஆனால், உச்சத்திற்கு போக விடமாட்டார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையே நெப்போட்டிசம் செய்து ஹிந்தியில் அவருக்கு வாய்ப்பு வராமல் தடுத்தது பாலிவுட். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். இத்தனைக்கும் அங்கு பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அவர் ஆஸ்கர் வாங்கியதும் ஒரு ஹிந்தி படத்திற்குதான். ஆனாலும், கடந்த சில வருடங்களாக அவர் ஹிந்தி படங்களுக்கு இசையமைக்கவில்லை.

இப்போது இதே நெப்போட்டிசம் இயக்குனர் அட்லியையும் அடித்திருக்கிறது. அட்லி தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் ரீமேக் செய்து தயாரித்துள்ளார். இதில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 25ம் தேதி வட மாநிலங்களில் வெளியாகவுள்ளது. தற்போது படக்குழு புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.


ஆனால், அட்லி தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் வட மாநில வினியோகஸ்தர்கள் இந்த படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்காமால் இருப்பதாக சொல்லப்படுகிறது. அட்லியின் குரு ஷங்கர் முதல்வன் படத்தை ஹிந்தியில் அனில் கபூரை வைத்து ‘நாயக்’ என்கிற பெயரில் எடுத்தார். ஆனால், அந்த படத்திற்கு பாலிவுட் வினியோகஸ்தர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் போனதால் படம் தோல்வி அடைந்தது. அதன்பின் ஷங்கர் ஹிந்தியில் படம் இயக்க போகவே இல்லை. இப்போது இது அட்லிக்கும் நடக்குமா என்பது தெரியவில்லை.

இத்தனைக்கும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் வட மாநிலங்களில் சூப்பர் ஹிட் அடித்து 1300 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story