கூலி,ஜெயிலர் கலெக்ஷன் ரிப்போர்ட் உண்மையா..? வசூலை புரட்டி எடுத்து ரிப்போர்ட் கொடுத்த ப்ரொடியூசர்..
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கூலி திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் நேற்று தயாரிப்பு நிறுவனம் கூலி படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உலகம் முழுவதும் கூலி படம் 151 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சமயத்தில் சன் பிக்சர்ஸ் இப்படி ஒரு வசூல் ரிப்போர்ட்டை வெளியிட்டிருப்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் உண்மையான வசூல் ரிப்போர்ட் என்ன என்று வசூலை அலசி எடுத்து வந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. மேலும் அவர் கூறுகையில், "சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்த கலெக்ஷன் ரிப்போர்ட் என்ன பொறுத்த வரை தேவையில்லை என்று சொல்வேன். இது தேவையில்லாத பிரச்சனையும் தேவையில்லாத சர்ச்சையும் கிளப்பி விடும். ஒரு படத்தினுடைய முழு வசூல் நிலவரம் அந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு மட்டும் தெரிந்திருந்தால் போதும்".
"அதைத் தவிர வேறு யாருக்கும் அதைப் பற்றி தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதனால் என்ன பிரச்சனை வருகிறது என்றால் ஓடாத படத்திற்கு கூட அந்த நடிகரை சந்தித்து அவர் உயரத்திற்கு மாலை தயார் செய்து அதை அவருக்கு போட்டு சக்சஸ் மீட் கொண்டாடுறாங்க. அப்படி கொடுக்கிற கலெக்ஷன் ரிப்போர்ட் சரியா? என்பதை யாராலும் சொல்ல முடியாது. இதுதான் உண்மை. ஒரு தயாரிப்பாளராக நான் சொல்வது என்னவென்றால் கூலி படம் 150 கோடி தாண்டியது என்று சொல்வதற்கான காரணம்,”
”அந்த நடிகரை குளிர்ச்சிப்படுத்துவதற்காகவும், திருப்தி படுத்துவதற்காகவும் தான் மார்க்கெட் உள்ள அந்த நடிகர் மறுபடியும் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு தேதி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள். சினிமா என்பது ஆரோக்கியமான விஷயமே கிடையாது. மக்களுக்கு இந்த மாதிரி கலெக்ஷன் ரிப்போர்ட் தேவையே கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை படம் நல்லா இருக்கா? இல்லையா? என்பது தான் முக்கியம். மற்றபடி கலெக்ஷன் ரிப்போர்ட்டை பொருத்தவரை ரசிகர்களுக்குள் தான் போட்டி சண்டை வருமே தவிர பொது மக்களுக்கு இதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது”.
”இங்கே லாஜிக் இல்லனாலும் ஓடுன நிறைய படங்கள் இருக்கு. ரசிகன் லாஜிக் பார்க்க மாட்டான். தலைவன் செய்கிற மேஜிக் மட்டும் தான் பார்ப்பான். ரஜினியின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் வசனங்கள் இருந்தாலே படம் இன்னும் நல்லா ஓடி இருக்கும். ரஜினிக்கான ட்ரேட் மார்க்கை பயன்படுத்தி டிஸ்கோ பாடலுக்கு ஆடவிட்டு இருந்தாலே படம் ஓடி இருக்கும்”. என்று அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
