அன்று நா.முத்துக்குமார்.. இன்று ரோபோ சங்கர்.. குடியால் அழியும் திரையுலகம்!..
அசத்தல் காமெடி மன்னன் :
Stand up comedian-னாக சின்னத்திரையில் முத்திரை பதித்தார் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ரோபோ சங்கருடன் சுட்டி அரவிந்த் செய்யும் லுட்டி இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
அதன் பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ’அது இது எது’ நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு round-ல் இவர் செய்யும் அலப்பறைக்கு சிரிக்காத நபர்களே கிடையாது. அந்த அளவிற்கு மக்களை entertain செய்து வந்தார். இதனால் இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்கள் காமெடிகள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
உடல்நல பாதிப்பு :
சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதுவும் இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்ததால் மிகவும் serious condition-க்கு தள்ளப்பட்டார். பின்னர் ஒரு வழியாக குணமாகி மீண்டும் பழைய நிலைமைக்கு வந்தார். உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்று அவரே பல நேர்காணலில் ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பும் இருந்தது. இந்நிலையில் நேற்று உடல் நல குறைவால் இந்த மண்ணுலகை விட்டு மறைந்து போனார்.
நா.முத்துக்குமார் மரணம் :
இதே போல் நா.முத்துக்குமாரும் குடிக்கு அடிமையாகி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதை சரியாக கவனிக்காமல் இளம் வயதிலேயே இந்த மண்ணுலகை விட்டு மறைந்து போனார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான பாலாஜி பிரபு கூறுகையில்,” ரோபோ சங்கர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் இருக்கும் போது மயங்கி விழுந்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது”.
”ரோபோ குடிக்கு அடிமையானதால் இந்த கல்லீரல் பாதிப்பு வந்துள்ளது. இதற்கு முன்னரே வாழ்வா சாவா? போராட்டத்தில் இருந்தார். அப்பொழுது என்னென்னவோ மருந்துகள் கொடுத்து எப்படியோ கஷ்டப்பட்டு காப்பாற்றி விட்டார்கள். அதற்குக் காரணம் நக்கீரன் கோபால் என்பவர் தான். அவருக்குத் தெரிந்த மருத்துவர் கல்லீரல் பிரச்சனையை குணமாக்கி கொடுத்தார்”.
குடிக்கு அடிமையான திரையுலகம் :
” இதே போல தான் நா முத்துக்குமாருக்கும் செய்தார் ஆனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் மறைந்தார். ரோபோ சங்கர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசிக்க வைப்பார். உடம்பு சரியில்லாமல் இருந்தபோது மட்டும் அவர் மது குடிக்காமல் இருந்துள்ளார். அதன் பிறகு பழையபடி குடிக்க ஆரம்பித்து விட்டார். இதை நான் கண்ணால் பார்த்தேன்”.
”மீண்டும் அவர் குடிக்க ஆரம்பித்ததால் தான் கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இந்த மாதிரி தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் இன்று தவறிவிட்டார். இதேபோல நா.முத்துக்குமாரும் என்னுடைய நெருங்கிய நண்பர் அவருடைய பாடல்களை இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவரும் மதுவுக்கு அடிமையாகி உயிரிழந்தார். திரை உலகில் இந்த மாதிரி சம்பவம் நடப்பது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. என்று தன்னுடைய வருத்தத்தை பதிவிட்டார்.
