1. Home
  2. Cinema News

நெப்போலியன் மகன் தனுஷிற்கு இரண்டாம் திருமணம் ஏன்?.. காரணங்களை உடைத்த தயாரிப்பாளர்

நெப்போலியன் மகன் தனுஷிற்கு இரண்டாம் திருமணம் ஏன்?.. காரணங்களை உடைத்த தயாரிப்பாளர்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் இவரது மூத்த மகனின் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடத்தி வைத்தார் நெப்போலியன். இதில் பல நட்சத்திரங்கள் கலந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இருவருக்கும் தற்போது அமெரிக்காவில் அமெரிக்க முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் தனுஷிற்கு மீண்டும் திருமணம் நடந்த காரணங்களை உடைத்து பேசி இருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மேலும் அவர் கூறியதாவது,” நெப்போலியன் நடிகர், பிசினஸ்மேன் என பல உயரங்களை தொட்டாலும் அவரை மிகவும் பாதித்த விஷயம் அவரின் மூத்த மகன் தனுஷ் தான். ஆரம்பத்தில் சாதாரண மனிதர்களைப் போல இருந்தாலும் வளர வளர அவருடைய வளர்ச்சியில் சில மாற்றங்களை நெப்போலியன் மற்றும் அவரது மனைவி இருவரும் கண்டுபிடிகிறார்கள். டாக்டரிடம் சென்று கேட்டதற்கு உங்களுடைய பையனுக்கு தசை சிதைவு நோய் இருக்கிறது”.

”இதை குணப்படுத்துவது மிகவும் கடினம். அவரை மனதால் மட்டுமே குணப்படுத்த முடியும் மருந்தால் முடியாது என்று மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். நிறைய மருத்துவர்கள் தேடி போகிறார். ஆனால் எதுவும் கை கூடவில்லை. அதன் பிறகு திருநெல்வேலியில் இந்த நோய்க்கு சிகிச்சை தருவதாக கேள்விப்பட்டு அங்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார் ஒரு சில நாட்களிலேயே சிறிய மாற்றங்கள் ஏற்பட்டது”.

“இதனால் அந்த மருத்துவருக்கு அந்த ஊரில் இதே மாதிரி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்ய மருத்துவமனை ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார் நெப்போலியன். இந்நிலையில் எப்பேர்ப்பட்ட தாய் தந்தையாக இருந்தாலும் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை இருக்கும் அப்படி தனுஷிற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திருநெல்வேலியில் இருந்து அக்ஷயா என்ற பெண் கிடைக்கிறார். இருவருக்கும் ஜப்பானில் திருமணம் நடந்து முடிந்தது”.

“அதன் பிறகு தற்போது இரண்டாவது முறை தனுஷுக்கும் அக்ஷயாவிற்கும் திருமணம் நடந்து முடிந்தது இதற்கான காரணம். இருவரும் அமெரிக்காவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே தனுஷ் அமெரிக்கன் சிட்டிசன்ஷிப் வைத்திருக்கிறார். அக்ஷயாவும் அந்த சிட்டிசன்ஷிப்பை பெற வேண்டும் என்றால் அமெரிக்க சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும். அதற்காகவே இந்த திருமண நடைபெற்றது. அந்த சிட்டிசன்ஷிப் வாங்குவதற்காகவே நடத்தப்பட்ட திருமணம் தான் இது”. என்று கூறியுள்ளார். நெப்போலியன் எவ்வளவு உயரம் சென்றாலும் தன்னுடைய பிள்ளைகள் நல்லா இருக்கணும் என்பதற்காக தன்னுடைய கடின உழைப்பை போட்டுக் கொண்டே இருப்பது மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.