அவரு நோ சொல்லிருக்க மாட்டாரு.. நயன்தாரா வழியே தப்பா இருக்கு!.. என்ன இப்படி சொல்லிட்டாரு..
நடிகை நயன்தாரா :
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலித்து வருகின்றார் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய நயன்தாரா தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். பொதுவாக சில நடிகைகள் வயதான பிறகு பீல்ட் அவுட்டாகி விடுவார்கள். ஆனால் 40 வயது தாண்டிய நிலையிலும் நடிகை நயன்தாரா தற்போது வரை நடித்து வருகின்றார்.
திருமணம் குழந்தைகள்:
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு தாயான நடிகை நயன்தாரா குழந்தைகளை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். ஒரு பக்கம் தனது குடும்பம், மற்றொரு பக்கம் சினிமா என இரண்டையும் சரிவர பார்த்து பிஸியாக இருந்து வருகின்றார்.
நயன்தாரா அறிக்கை:
நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்து 3 வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கின்றார் என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில் யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தனஞ்செயன் பேட்டி:
பிரபல தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'நடிகை நயன்தாரா மற்றவர்களை விட்டு பேசாமல் தானே ஒரு போன் செய்து பேசியிருந்தால் நடிகர் தனுஷ் நிச்சியம் ஒப்புக்கொண்டிருப்பார். இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். அதிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் படங்கள் தான்.
யாரடி நீ மோகினி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. உங்களிடம் நிச்சயம் தனுஷ் நம்பர் இருந்திருக்கும். அவருக்கு நேராக போன் செய்து இது போன்று நானும் ரவுடிதான் படத்தில் இருந்து அந்த பாடல் தனக்கு வேண்டும் என்று கேட்டிருக்கலாம் அல்லது அந்த பாடலை உங்களுக்கு கொடுப்பதற்கு விருப்பம் இல்லை என்றால் அந்த பிடிஎஸ் காட்சிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டிருந்தால் நடிகர் தனுஷ் நோ சொல்லி இருக்க மாட்டார்.
அதை விட்டுவிட்டு மற்றவர்கள் மூலமாக அவரை அணுக வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது. தனுஷ் ஒரு நல்ல மனிதர் இந்த பிரச்சனைக்கும் செல்லாதவர். ஒருமுறை எனது தயாரிப்பில் நடிப்பதற்கு அக்ரிமெண்ட் போடப்பட்டு அவருக்கு இரண்டரை கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்தை தன்னால் தயாரிக்க முடியவில்லை.
பின்னர் தனுஷிடம் சென்று அந்த படத்தை தன்னால் தயாரிக்க முடியவில்லை. அதனால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்ட போது எதுவுமே பேசவில்லை. உடனே என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ஒரு மூன்று தவணைகளாக அந்த பணத்தை கொடுப்பதற்கு மட்டும் சம்மதியுங்கள் என்று கூறினார். அவர் சொன்னது போல பணத்தை சரியாக கொடுத்து விட்டார். எந்த ஒரு சண்டையும், பஞ்சாயத்தும் வரவில்லை.
அப்படிப்பட்ட ஒரு நபர் நிச்சயம் நயன்தாரா கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். சமீப நாட்களாக நடிகை நயன்தாராவின் அடுத்தடுத்த கட்டங்கள் தப்பா போவதாக நான் பார்க்கிறேன். ஓபனாக மீடியாவில் இருப்பவர்களை தவறாக பேசுவதும் எதுவுமே தேவையில்லாத வேலை' என்று கூறி இருக்கின்றார்.