சூப்பர்ஸ்டாரைப் பார்த்துக் கத்துக்கோங்க நயன்ஜி... 22 வருஷம் மிராக்கிள் திரிஷா!

by Sankaran |   ( Updated:2024-12-15 14:31:04  )
nayanthara, trisha
X

நயன்தாரா தனுஷ் விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். அதுமட்டும் அல்லாமல் தற்போது வலைப்பேச்சாளரகளான பிஸ்மி, அந்தனன், சக்திவேல் ஆகியோரைக் குரங்குன்னும் பேசி இருக்கிறார். இது சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் நடிகைகள் நயன்தாரா, திரிஷா குறித்து சில சுவாரசியமான தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

லேடி சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டாரா இருக்கணும். எப்படி நம்ம சூப்பர்ஸ்டாரைப் பார்த்தீங்கன்னா இதுக்குள்ள எல்லாம் வரவே மாட்டாரு என்கிறார் தனஞ்செயன். அப்போது சித்ரா லட்சுமணன், நயன்தாராவுடைய இத்தனை வருட பயணத்தில் பார்த்தீங்கன்னா கடந்த 6 மாத காலமாகத் தான் பிரச்சனையே வருது. அதுவரைக்கும் எந்த ஒரு கான்ட்ரோவர்சியுமே இல்லாம தான் இருந்தாங்க. என்ன காரணம்னு கேட்கிறார்.

producer dhananjeyan

அதற்கு தனஞ்செயன் இப்படி சொல்கிறார். கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் ரியாக்ஷன் ஆகிடுச்சு. இந்த 2 மேட்டர்லயும். அதுக்குக் காரணம் கோபம் இருக்கலாம். ஆதங்கம் இருக்கலாம். நான் சொல்றது...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை எவ்ளோதான் நீங்க சொல்லுங்க. ட்ரோல் பண்ணுங்க. நான் பாட்டுக்கு வேலையைப் பார்த்துட்டுப் போறேன். தனிமனித தாக்குதல் பண்ணாலும் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம போய்க்கிட்டே இருப்பாரு. என்ன காரணம்னா அவர் அதைத்தாண்டிப் போயிட்டாரு.

நான் நயன்தாரா மேடம்கிட்ட சொல்றது இதுதான். நீங்க அதைத் தாண்டி எங்கேயோ இருக்கீங்க. உங்களுக்கான மார்க்கெட் அவ்ளோ பெரிசு. மக்கள் உங்களை ரசிக்கிறாங்க. இதுல போய் நீங்க கமெண்ட் கொடுத்து மாட்டிக்க வேணாம். இது மாதிரி லட்டர் கொடுத்து ஒருத்தரை ஹர்ட் பண்ண வேணாம்கறது தான் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்.

22வது வருஷத்துல நடிக்கப் போறாருன்னதும் என்னங்க அப்படியே இருக்கீங்கன்னு திரிஷாவைப் பார்த்து எல்லாருமே கேட்குறாங்க. அவர் எந்த சிக்கல்லயும் மாட்டவே இல்லை. நான் எந்த நல்ல விஷயத்தைப் பார்த்தாலும் வாட்சப்ல மெசேஜ்; பண்ணுவேன். ஆனா அவங்க உடனே ரிப்ளை பண்ணுவாங்க.

Trisha 22

22 வருஷத்துக்குப் பிறகும் அவர் இன்னும் ஹீரோயினா நடிக்கிறாங்கன்னா அதுவே பெரிய மிராக்கிள். தளபதி 69லயும் கேமியோ ரோல் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. எந்த பிரச்சனைன்னாலும் ஒரு எல்லைக்கு மேல போக மாட்டாங்க. இவ்வாறு தனஞ்செயன் தெரிவித்துள்ளார். சூர்யா 45 படக்குழுவினருடன் திரிஷா தனது திரைப்பயணத்தில் 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Next Story