இன்னும் 2 நாள்ல நல்ல செய்தி!.. வாடிவாசல் அப்டேட்.. கலைப்புலி தாணு சொன்ன குட் நியூஸ்..

by Ramya |
dhanu
X

dhanu

வாடிவாசல்: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் வாடிவாசல். கிட்டத்தட்ட 2 வருடத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. அந்த சமயத்தில் டைட்டில் டீசர் கூட வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் அதிக அளவில் காத்திருந்தார்கள்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மையமாக வைத்து உருவாக இருக்கும் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் படம் தற்போது வரை டேக் ஆஃப் ஆகவில்லை. இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருந்தார். எப்போதும் வெற்றிமாறன் படங்கள் என்றாலே ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அப்படித்தான் இந்த திரைப்படத்திற்கும் இருந்தது.


படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் அதனை தொடர்ந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கு இடையில் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் பாகங்களை இயக்குவதற்கு சென்றுவிட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது.

இந்த முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 2 வருடங்களாக வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து வந்தார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

வெற்றிமாறன் ஒரு பக்கம் விடுதலை பாகத்தை இயக்கி வர நடிகர் சூர்யாவும் மற்றொருபுறம் வெவ்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு பிஸியாகிவிட்டார். இதனால் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டது என்று பலரும் கூறி வந்தார்கள். இது சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நிச்சயம் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படம் வரும் என தகவல் வெளியானது.

சமீபத்தில் பேட்டிகளில் கலந்து கொள்ளும் வாடிவாசல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை முடித்து இருக்கின்றார். படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரை வந்து அணுகினார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் கூட பிரபல நிறுவனம் அவரை அணுகினார்கள். ஆனால் அவர் வாடிவாசல் திரைப்படத்திற்கு பிறகு தான் எந்த படத்திற்காக இருந்தாலும் வருவேன் என்று கூறிவிட்டார்.


விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். சூர்யா மற்றும் வெற்றிமாறன் இடையே மீட்டிங் நடக்கும். ஜனவரி 5ஆம் தேதிக்கு பிறகு ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல செய்தி காத்திருக்கின்றது என்று கூறியிருந்தார். இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிச்சியம் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் ஏதேனும் வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று கூறி வருகிறார்கள். மேலும் நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கின்ற திரைப்படத்திலும், ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இருப்பினும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story