தண்டகாரண்யம் படம் எனக்கு ரீஸ்க்தான்.. ஆழம் தெரிந்தே காலை விட்ட பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்ஷன் மூலம் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தண்டகாரண்யம்'. இந்த படத்தை இரண்டாம் உலகப் போரில் கடைசி குண்டு படத்தில் இயக்குனர் ஆதியன் ஆதிரை இக்கியுள்ளார். இப்படத்தில் கெத்து தினேஷ், கலையரசன், ரித்விகா போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இந்த படம் எடுத்தால் பல பின் விளைவுகள் வரும் என்று தெரிஞ்சுதான் எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
பா ரஞ்சித்தின் படங்கள் எப்பொழுதும் புரட்சி பேசும் படங்களாக தான் இருக்கும். அப்படி இந்த முறை யாரும் சொல்லாத, சொல்லத் தயங்குற கதை ஒன்றை கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் அடிதட்டு மக்களின் உணர்வுகளை அவர்களின் வலிகளை இந்த படத்தின் மூலம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது தெரிகிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித் அதில்
"இந்த முறை மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே பழக்கப்பட்ட கதையை சொல்லாமல் அவர்களின் சமூக பிரச்சினைகளை பேசுகின்ற படத்தை எடுக்கும் பொழுது அதற்கு பெரிய சவால் இருக்கிறது. அதுவும் தியேட்டரில் அந்த படத்தை கொண்டு சேர்ப்பது என்பது சாதாரண விஷயமே இல்லை. அது பெரிய சவால்தான் அந்த சவாலை ஏற்றுக் கொண்டுதான் நாங்கள் இந்த படத்தை செய்திருக்கிறோம். மக்களை மீறிய நம்பிக்கை வேறு எதுவுமே இல்லை”.
”உண்மையிலேயே யாரும் யோசிக்க முடியாத இந்த மாதிரியான ஒரு பிரச்சனையை பேசினால் பல பின் விளைவுகள் எனக்கு வரும் என்று எனக்குத் தெரிஞ்சு தான் தண்டகாரண்யம் படத்தை எடுத்திருக்கிறோம். அது மக்கள் மேல் உள்ள அதிக நம்பிக்கை தான் காரணம். இந்த படம் வெற்றியடையும் பட்சத்தில் இதேபோல இன்னும் நிறைய படங்கள் எடுக்க ஆர்வம் அதிகரிக்கும். அதற்கான ஆதரவு மக்கள் எங்களுக்கு தர வேண்டும்”.
”நான் ஒரு டெமாக்ரடிக் சிஸ்டமை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு பிடிக்காத இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஒரு விஷயம் இருக்கு என்றால் அது இன் ஈக்குவாலிட்டி தான். அதைக் காப்பாற்றுகிற எண்ணம் கொண்டவர்களோடு நாம் வேலை செய்யவே முடியாது. ஆனால் இந்த சமூகத்தில் ஈக்குவாலிட்டி பேசும் மனிதர்களுடன் நாம் தொடர்ந்து இங்கி கொண்டிருக்கிறோம்”.
”அதேபோல நாம் நினைக்கிற அரசியலை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அவர்களிடம் விழிப்புணர்வை உண்டு பண்ண வேண்டும் என்பதுதான் எங்களுடைய மிகப்பெரிய நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்தோடு நாங்கள் ஒரு பொருளை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். இந்த நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்து கொண்டதால் நாங்க இங்கே நிற்கிறோம்”.
”சோசியல் ஜஸ்டிஸை பயங்கரமான கொள்கையாகவும் அதை மக்கள் கிட்ட கொண்டு போய் சரியாக சேர்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாக ’நீலம்’ இருக்கிறது என்பதில் நான் பெருமை கொள்கிறேன்”. என்று கூறியுள்ளார்
