1. Home
  2. Cinema News

30வது நாள் கருமாதி.. எங்கேயாவது இப்படி நடக்குமா? விஜயின் செயலால் கடுப்பான தயாரிப்பாளர்

vijay
இறந்தவங்களுக்கு கருமாதியா? தவெகவுக்கு மொத்தமா கருமாதியா? இப்படி செய்யலாமா விஜய்?

கரூர் தேர்தல் பரப்புரையில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தையும் விஜய் பார்க்கப் போகிறார் என்ற ஒரு செய்தி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த 41 பேர் குடும்பத்தையும் நேரில் போய் பார்ப்பதாகத்தான் முதலில் சொல்லப்பட்டது. அதன் பிறகு அந்த முடிவிலிருந்து விஜய் மாறி இருக்கிறார். உயிரிழந்த 41 பேர் குடும்பத்தையும் சென்னைக்கு வரவழைத்து ஒரு பெரிய அரங்கில் தங்க வைத்து அங்கு விஜய் பார்க்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப்பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் செந்தில் பாலாஜி விஜயின் இந்த செயலை மிகவும் நக்கலாக பேசியிருக்கிறார்.

எங்க தலைவர் இப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கப் போகிறார் என தவெகவினர் ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கின்றனர். அதையும் தாண்டி ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைவரும் சென்னைக்கு வரவும் என்று வீடு வீடாக சென்று அறிவுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. பேருந்து அனுப்பப் போவதில்லை. விஜயின் தனி விமானம்தான் கரூருக்கு செல்ல இருக்கிறது. அங்கு ஒவ்வொரு குடும்பங்களையும் ஏற்றி சென்னைக்கு வரவழைத்து அப்படித்தான் விஜய் சந்திக்கப் போகிறார். இது எங்கேயாவது நடக்குமா?

கடந்த 27ஆம் தேதி அந்த ஒரு பெரிய துயர சம்பவம் நடந்தது. கரூரில் தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் .இந்த மாதம் 27ஆம் தேதி அதாவது 30 வது நாள் கருமாதி அன்று அனைவரையும் விஜய் சந்திக்க இருக்கிறார். கருமாதியை அங்கு பண்ண வேண்டாம். எல்லோரும் சேர்ந்து இங்கேயே செய்து கொள்ளலாம் என்று நினைத்து சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர் .துக்கம் விசாரிக்கும் முறை என்பது என்ன என்பதே விஜய்க்கு தெரியவில்லை. துக்கம் நடந்த வீட்டிற்கு தானே சென்று துக்கம் விசாரிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்து இந்த மாதிரி எங்கள் வீட்டில் இப்படி நடந்து விட்டது. இத்தனை பேர் இறந்துவிட்டனர் என்று விஜய்யிடம் வந்து சொல்ல இருக்கிறார்கள்.

இப்படியா துக்கம் விசாரிப்பது என்று விஜய்க்கு எதிராக செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருக்கிறார். அரசியல் என்பது இவருக்கு விளையாட்டாக போய்விட்டது. இதுவரை எந்த அரசியல்வாதியாவது 14பேர் குடும்பத்தினருக்கும் வீடியோ காலில் பேசி பார்த்திருக்கிறீர்களா? இந்த சம்பவம் நடந்ததே உங்களால் தான். நீங்கள் போனதனால் தான் இந்த சம்பவமே நடந்தது. இவரை தவிர மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுடைய துக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். அங்கு போகாத ஆட்களே கிடையாது.

இவர் ஒருத்தர் மட்டும் தான் வீட்டிலேயே பதுங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த குடும்பங்களை சந்தித்து கட்டிப்பிடித்து விஜய் அழுது இருக்க வேண்டும். நீலாங்கரை வீட்டை விட்டு அவர் வெளியில் வரவில்லை. தவெக ஒரு கட்சியா என இப்போது கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். அது உயிர்ப்புடன் தான் இருக்கிறதா? இயங்கிக் கொண்டிருக்கிறதா என்று அனைவருமே இப்போது கேட்க ஆரம்பித்து விட்டனர். 30 நாள் ஒரு தலைவர் வீட்டிற்குள்ளேயே பதுங்கிக் கொண்டிருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் இப்பொழுதுதான் வெளியில் வந்திருக்கிறார். 

நிர்மல் குமாரும் இப்பொழுது தான் வெளியில் வந்திருக்கிறார் .ஆதவ் அர்ஜுனாவும் டெல்லிக்கும் சென்னைக்கும் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் .தலைவர் தான் பேசமாட்டார். பேசத் தெரியாது. கூட இருக்கிறவர்களாவது ஏதாவது அறிக்கை விடலாம் அல்லவா? இந்த 30 நாளும் தவெக கட்சியிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் பதிவும் வந்ததாக தெரியவில்லை. அந்த வீட்டிற்குள் அவர் மட்டுமே தனியாக இருக்கிறார். இந்த தனிமை பின்னாளில் அவருக்கே ஒரு பெரிய நோயாக மாறிவிடும்.

இது தெரிந்து செய்கிறாரா தெரியாமல் செய்கிறாரா என தெரியவில்லை.  பெற்றோருடனும் இருக்கவில்லை. கட்டின மனைவியுடனும் இருக்கவில்லை. குழந்தைகளுடனும் இருக்கவில்லை. கூட நெருக்கமானவர்கள் என யாருமே அவருடன் இல்லை. தனியாகவே தான் இருக்கிறார். இதைவிட இன்னும் ஆச்சரியம் என்னவெனில் விஜய்  சென்னையில் இருக்கும் பொழுது மதிய உணவு சென்னையில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து அவருக்கு போகிறது. அதாவது வீட்டில் ஆளே கிடையாது. ஒரு ஆளுக்கு என்ன சமைப்பார்கள்? அதனால் வீட்டில் ஆளே கிடையாது. ஹோட்டலில் இருந்து தான் இவருக்கு சாப்பாடு செல்கிறது என செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.