Coolie: டிக்கெட் கேட்டா ஒருத்தனும் போன் எடுக்கல!.. இருங்கடா என் படம் வரட்டும்!.. தயாரிப்பாளர் ஃபீலிங்..
Coolie: தமிழ் சினிமா ரசிகர்களிடம் இப்போது கூலி ஃபீவர்தான் அதிகமாக காணப்படுகிறது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் டிக்கெட் முன்பது களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களில் ஆன்லைன் முன்பதிவில் கூலி திரைப்படம் மிகப்பெரிய சாதனையை செய்து காட்டி இருக்கிறது.
அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜுடன் ரஜினி கூட்டணி அமைத்து இருப்பதுதான். இதற்கு முன் வந்த வேட்டையன் படம் கூட இந்த ஹைப்பை உருவாக்கவில்லை. ஏனெனில் அப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியிருந்தார். ஆனால் கூலியை விக்ரம், கைதி, மாஸ்டர், லியோ போன்ற பக்கா ஆக்சன் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். எனவே அவரோடு ரஜினி கூட்டணி அமைத்திருப்பதால் படத்திற்கு பெரிய ஹைப் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பல கோடிகளுக்கும் விற்பனையாகி இருக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு விட்டது. உலகளவில் கூலி படத்திற்கான முன்பதிவு டிக்கெட் 100 கோடியை நெருங்கி விட்டது. எனவே இப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் என பலரும் சொல்கிறார்கள்.
ஒருபக்கம் கோலிவுட்டில் கூலி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க பல சினிமா பிரபலங்களுமே ஆசைப்படுகிறார்கள். இதில் எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. இந்நிலையில் கைதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எஸ்.ஆர் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பல நாட்களுக்கு பிறகு நண்பர்களிடம் இருந்து அதிக போன் கால் வருவது மகிழ்ச்சி.. கூலி டிக்கெட் கிரேஸுக்கு நன்றி.. அதேநேரம் டிக்கெட் கேட்டு நான் போன் செய்தால் எந்த நண்பர்களும் போனை எடுக்கவில்லை..
ஞாபகம் வச்சுக்கோங்க!.. கைதி 2 -வுக்கு டிக்கெட் கேட்டு நீங்க போன் பண்ணும் போது நான் போன் எடுக்க மாட்டேன்’ என ஜாலியாக பதிவிட்டு இருக்கிறார்.இதற்கு லைக் போட்டு வரும் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் சூர்யாவின் ரசிகர்கள் ‘இது இருக்கட்டும் சார்.. கருப்பு படம் எப்ப ரிலீஸ்? அத சொல்லுங்க’ என கேட்டு வருகிறார்கள்.
சூர்யா நடித்து விரைவில் வெளியாக உள்ள கருப்பு படத்தின் தயாரிப்பாளரும் எஸ்.ஆர் பிரபுதான். மேலும், லோகேஷ் கனகராஜை மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். லோகேஷ் அடுத்து இயக்கிய கைதி படத்தையும் இவர்தான் தயாரித்திருந்தார். தற்போது கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கைதி 2 படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
