வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூட இதுவே காரணம்.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவின் முன்னணியில் இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். அவரின் உதவியாளர் வர்ஷா பரத் இயக்கியுள்ள திரைப்படம் தான் ”பேட் கேர்ள்”. இந்த படத்தை வெற்றி மாறனுடன் இணைந்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், டிஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அமித் த்ரிவேடி அமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது, அதில் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த உலகத்தில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள் இச்சைகளை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்? அதை எப்படி பார்க்கிறாள்?.
அதை எப்படி அனுபவிக்கிறாள்? என்பதைப் பற்றி இப்படம் எடுத்துரைக்கிறது. இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும் பல தடைகளும் வந்த நிலையில் ஒரு வழியாக இந்த படத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த வெற்றிமாறன் ”நான் பேட் கேர்ள் திரைப்படத்துடன் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடி விடுவேன் திரைப்படத்தின் வணிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளருக்கு அழுத்தத்தை கொடுக்கிறது” என்று கூறியுள்ளார். இவர் நடத்தி வரும் ’கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ பல இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஒரு தயாரிப்பாளராக தான் மிகவும் அவஸ்தைப்பட்டு வருவதாகவும் இதனால் இனி எந்த படங்களையும் நான் தயாரிக்கப் போவதில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் டி.தனஞ்ஜெயன் வெற்றிமாறன் ஏன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறார் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் அதில்,” ஒரு தயாரிப்பாளர்களுக்கு படம் எடுத்து வெளியிடுவதில் மூன்று பிரச்சனைகள் உள்ளது. ஒன்று பைனான்ஸ் சிக்கல். இரண்டாவது சொசைட்டி மற்றும் சென்சா போர்ட் இதனால் ஏற்படும் பிரச்சனைகள். மூன்றாவது வெற்றிமாறனுக்கு இருக்கும் டைம் கமிட்மெண்ட் பிரஷர்”.
”ஒரே நேரத்தில் அவர் அவருடைய படங்களுக்கும் கவனம் செலுத்தனும் அவர் தயாரிக்கும் படத்திற்கும் கவனம் செலுத்த வேண்டும். இது எதுவுமே பண்ண முடியாமல் இவ்வளவு பிரஷரில் எதுக்கு இருக்க வேண்டும் என்றுதான் அவரின் தயாரிப்பு நிறுவனத்தை மூடி இருக்கிறார். ஆனால் நான் அவரிடம் நீங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் வெற்றியடைமேயானால் மறுபடியும் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளேன். அவர் பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். அதனால் இதுதான் பிரச்சனை மத்தபடி திரைத்துறை ரொம்ப மோசமாக இருக்கிறது என்ற மனநிலைக்கு யாரும் வர வேண்டாம். இது அவருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட காரணம். என்று கூறியுள்ளார்.
