அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்குது!.. மீண்டும் அதே கூட்டணி.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..!
நடிகர் சூர்யா: தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சூர்யா கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் மற்றும் கங்குவா 2 திரைப்படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை தழுவியது. இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார் நடிகர் சூர்யா. ஏனென்றால் இந்த திரைப்படத்திற்காக இரண்டு திரைப்படங்களை கைவிட்டு 2 வருடங்கள் கங்குவா படத்திற்காக மட்டுமே மெனக்கட்டு நடித்து வந்தார். கங்குவா படத்தின் தோல்வி நடிகர் சூர்யாவை பெரிய அளவில் பாதித்து இருக்கின்றது.
இயக்குனர் வெற்றிமாறன்:
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு கொரோனா காலத்தில் வெளியானது. அதன் பிறகு இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் பாகங்களை இயக்குவதில் பிஸியாக இருந்துவிட்டார்.
மற்றொரு பக்கம் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. ரசிகர்களிடைய கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
வாடிவாசல் திரைப்படம்:
இயக்குனர் வெற்றிமாறனுக்கும் சரி, நடிகர் சூர்யாவுக்கும் சரி கடைசியாக அமைந்த திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் வெற்றிமாறன் மீண்டும் வாடிவாசல் திரைப்படத்தின் கதையை கையில் எடுத்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் சமூக வலைதள பக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் குறித்து பேசி வந்த நிலையில் இன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பாளர் எஸ் தாணு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவுடன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கின்றது என்று பதிவிட்டு இருக்கின்றார். அதாவது வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை அவர் கூறியிருக்கின்றார். மேலும் வெற்றி மாறன், சூர்யா, தயாரிப்பாளர் தாணு மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கின்றார்.
இந்த புகைப்படத்துடன் வாடிவாசல் படம் குறித்த அப்டேட் வெளியானதை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.