கூலியும், தக் லைஃப்பும் அந்த விஷயத்துல ஒண்ணுதான்… தயாரிப்பாளர் தரும் 'நறுக்' தகவல்!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானதில் இருந்து வெற்றி நடைபோடுகிறது. படத்தைப் பற்றியும் அதன் கலெக்ஷன் குறித்தும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்கிறார்னு பாருங்க.
கூலி படத்துக்கு வர்ற நெகடிவ் ரிவியூஸ் எதுவுமே கலெக்ஷனைப் பாதிக்கல. அதுதான் ரஜினி சார் மேஜிக். நாலு நாள்கள்ல 400 கோடி என்பது எந்த தமிழ் சினிமாவும் பண்ணாத ஒரு ரெக்கார்டு. இந்த ரேஞ்ச்ல போனா 7 நாள்கள்ல 500 கோடி. லைஃப் டைம்ல 650 கோடி பண்ணலாம். இது இன்டஸ்ட்ரி ஹிட்டா மாற எல்லா வாய்ப்பும் இருக்கு. செகண்ட் வீக்ல எந்த காம்படிஷனும் கிடையாது.
ஜெயிலர் படத்துக்கு அப்புறம் அதிக கூட்டம் இந்தப் படத்துக்குத் தான் வந்தது. ரஜினி சார் தான் அதுக்குக் காரணம். ரஜினிசாருக்கும், விஜய் சாருக்கும் எவ்வளவு தான் நெகடிவ் ரிவியூஸ் வந்தாலும் அது பாதிக்காது. நான் பார்த்து டிசைடு பண்றேன்னு தான் ரசிகர்கள் படம் பார்க்கப் போவாங்க.
யாரும் கேம்பைன் பண்ணாதீங்க. கருத்து சொல்லுங்க. படம் பிடிக்கலன்னா ஒண்ணும் சொல்லாமப் போய்க்கிட்டே இரு. ஊடகங்கள்ல இருக்குறவங்க பேசட்டும். அவங்க ஓகே. ஆடியன்ஸ் ஆடியன்ஸா இருக்கணும். சோஷியல் மீடியா கிடைச்சதுங்கறதுக்காக எல்லாத்துலயும் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு மொக்கைன்னு பதிவு பண்றது வேணாம்.
ஆடியன்ஸ் ரொம்ப புத்திசாலி. நாம பார்க்காத கோணத்துல அவங்க பார்த்து நிறைய கேள்வி கேட்குறாங்க. அவங்களே பார்த்து வியக்கற அளவுக்கு படம் பண்ணனும். அட்லீஸ்ட் அவங்களோட எதிர்பார்ப்புக்கு ஈக்குவலாவது கொடுக்கணும். இல்லன்னா இந்த மாதிரி ரிவியூஸ் வரத்தான் செய்யும்.
ஆடியன்ஸோட எதிர்பார்ப்பைக் கிரியேட் பண்ணிட்டு அதுக்கு ஏத்த மாதிரி படம் இல்லன்னா அவங்களுக்கு அதிருப்தி வரத்தான் செய்யும். அதே நேரம் ஹைப் கொடுக்கலன்னா ஒண்ணும் புரொமோஷன் பண்ணலன்னு சொல்வாங்க. கூலி 1000 பாட்ஷாவுக்குச் சமம்னு நாகர்ஜூனா சொன்னாங்க.
ஆனா அது வரலன்னு சொல்ல முடியாது. அதுக்கு ஏத்தமாதிரி சிலோன் காட்சிகள் எல்லாம் வருது. ரஜினி சார் அவ்ளோ சூப்பரா வர்றாரு. அதே நேரம் ஆடியன்ஸ்சுக்கு பாட்ஷா எவ்ளோ சூப்பர் படம். அதுமாதிரி சொல்லிட்டு ஏன் இப்படி படத்தைக் கொடுக்குறன்னுதான் கேட்பாங்க. அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. தக் லைஃப் படத்துக்கும் இதுதான் நடந்தது.
இது நாயகன் படத்தோட அடுத்த கட்டமா எடுக்கணும்னு சொன்னதும் அதை வச்சி செஞ்சாங்க. இது நாயகனாப்பான்னு. என்னப்பா நாயகன்னு போட்டுருக்கேன்னு சொன்னாங்க. இப்படி பல படங்கள் இருக்கு என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
